Header Ads



8 பாராளுமன்ற உறுப்பினர்களின், குடியுரிமை பறிக்கப்படுமா..?

இரட்டை குடியுரிமை பெற்ற நாடளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் உள்ளனர் எனபிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எனவே, கீதா குமாரசிங்கவிற்கு வழங்கிய தீர்ப்பே ஏனைய எட்டு பேருக்கும் வழங்கவேண்டும் என கம்மன்பில கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தகவலறியும் சட்ட மூலத்தின் கீ்ழ் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள குறித்த எட்டுநாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களையும் உறுதிப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கம்மன்பில கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஒரு மாதத்தில் தகவல் கிடைத்துவிடும் என்றும் கம்மன்பில கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.