Header Ads



7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழையின் அசாதாரண நிலை காரணமாக இலங்கையின் ஏழு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் என்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை சற்றைக்கு முன்னர் இலங்கை கட்டிடவியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள மலைப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயருமாறு குறித்த சிவப்பு எச்சரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை எதிர்வரும் 29ம் திகதி நண்பகல் வரை செல்லுபடியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டம்

இரத்தினபுரி, எலபாத, பெல்மதுளை, குருவிட்ட, எஹலியகொடை, இம்புல்பே, அயகம, கஹவத்தை, கலவான, கொலொன்ன மற்றும் நிவிதிகல

கேகாலை மாவட்டம்

புளத்கொஹுப்பிட்டிய, தெரணியகல, எட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட

காலி மாவட்டம்

பத்தேகம, யக்கலமுல்லை, நெளுவை, தவலம, நியாகம மற்றும் நாகொடை

களுத்துறை மாவட்டம்

புளத்சிங்கள, வலல்லாவிட, அகலவத்தை மற்றும் பதுரலிய

மாத்தறை மாவட்டம்

கொடபொல, பஸ்கொட, பிடபெத்தர, முலட்டியன

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

வலஸ்முல்லை மற்றும் கடுவனை

கண்டி மாவட்டம்

கங்கஇஹஅத்தர கோரளை

இப்பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எதிர்வரும் 24 மணி நேரம் வரை கடும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.