Header Ads



வெள்ளவத்தையில் இடிந்து விழுந்தது, முஸ்லிம் ஒருவரின் 5 மாடிக் கட்டிடமே

வெள்ளவத்தையில் இடிந்து விழுந்தது, முஸ்லிம் ஒருவரின் 5 மாடிக் கட்டிடமே என அறிவிக்கப்பட்டுள்ளது. தர்காடவுன் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரின் 5 மாடிக்கட்டிடமே இதுவாகும்.

2

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தை பகுதியில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாலேயே இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள கட்டடமொன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

எனவே,வாகன ஓட்டுனர்கள் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கட்டடம் இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள்,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.