Header Ads



நடுவீதியில் பொலிஸார், பாதாள உலகக் குழு­ மோதல் - ஒருவர் பலி, 5 பேர் காயம்

பிலி­யந்­தலை பகு­தியில் போதைப்பொருள் சுற்றி வளைப்­பொன்­றுக்குச் சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீவ தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் மீது முன்­னெ­டுக்­கப்பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார். அத்­துடன் சிறப்பு விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ரங்கஜீவ உள்­ளிட்ட இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் சிறு­வர்கள் இருவர் உள்­ளிட்ட மூன்று சிவி­லி­யன்­களும் காய­ம­டைந்து களு­போ­வில - கொழும்பு தெற்கு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டுள்­ளனர்.

இச்­சம்­பவம் நேற்று இரவு 8.30 மணிக்கும் 8.45 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் பிலி­யந்­தலை மக்கள் வங்­கிக்கு அருகில் இடம்­பெற்­றுள்­ளது.

 இதன் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான (4946) அபே­விக்­ரம உயி­ரி­ழந்தார் எனவும் பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீ­வ­வுடன் பொலிஸ் கான்ஸ்­டபிள் (67055) சமிந்த காய­ம­டைந்­த­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 இத­னை­விட காய­ம­டைந்­த­வர்­களில் 8 வய­தான சிறுமி ஒருத்­தியும் 15 வய­தான சிறுவன் ஒரு­வனும் மற்­றொரு சிவி­லி­யனும் களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்ப்ட்­டுள்ள நிலையில் 8 வயது சிறு­மியின் நிலைமை கவலைக் கிட­மாக உள்­ள­தாக களு­போ­வில வைத்­தி­ய­சா­லையின் பேச்­சாளர் ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

 இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,

 சுமார் 10 கிலோ வரை­யி­லான போதைப் பொருள் வர்த்­தகம் ஒன்று தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வுக்கு தகவல் கிடைத்­துள்­ளது. இந் நிலையில் அது தொடர்பில் உடன் செயற்­பட்­டுள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, அதன் பிர­தா­னி­யான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்­வாவின் ஆலோ­ச­னையைப் பெற்று செயற்­பட்­டுள்­ளது. அதன்­படி அது தொடர்­பி­லான சுற்­றி­வ­ளைப்­புக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசா­ரணை அதி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீவ தலை­மையில் குழு­வொன்ரு பொலிஸ் தலை­மை­ய­கத்தில் இருந்து அனுப்­பப்பட்­டுள்­ளது.

இந் நிலையில் இக்­கு­ழு­வா­னது சுற்­றி­வ­ளைப்­புக்­காக பிலி­யந்­த­லையை அடைந்த போது, பிலி­யந்­தலை மக்கள் வங்­கியை அண்­மித்து நடு வீதியில் வைத்து துப்­பாக்கிச் சூடு நடத்­தப்பட்­டுள்­ளது. பொலிஸ் அதி­கா­ரிகள் பய­ணித்த வாக­னத்தை முந்திச் செல்­வது போன்று வந்­துள்ள மோட்டார் சைக்­கிள்­களில் வந்­துள்ள பாதாள உலகக் குழு­வினர் என சந்­தே­கிக்­கப்­படும் நபர்கள், பொலி­ஸாரின் வாகனம் மீது சர­மா­ரி­யான துப்­பாக்கிச் சூட்­டினை நடத்­தி­யுள்­ளனர்.

இதன் போது பொலிஸ் ஜீப் வண்­டியை செலுத்திச் சென்­ற­தாக நம்­பப்­படும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரே உயி­ரி­ழந்­துள்ளார். ஜீப்­பி­லி­ருந்த ஏனையோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

இதனை விட இந்த துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­படும் போது அப்­ப­கு­தியில் இருந்த வர்த்­தக நிலையம் ஒன்றும் துப்­பாக்கிச் சன்­னங்­களால் துளைக்­கப்பட்­டுள்­ளது. இதன் போதே அந்த வர்த்­தக நிலையம் அருகே இருந்த இரு சிறுவர்­களும் மற்­றைய சிவி­லி­யனும் காய­ம­டைந்­துள்­ளனர். இத­னை­விட பொலிஸ் ஜீப் வண்­டிக்கு மேல­தி­க­மாக அப்­ப­கு­தியில் இருந்த மேலும் மூன்று வாக­னங்­களும் துப்­ப­ாக்கிப் பிர­யோ­கத்தில் சேத­ம­டைந்­துள்­ளன.

துப்­பாக்கிச் சூட்­டினை அடுத்து உட­ன­டி­யாக பாதாள உலக உறுப்­பி­னர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் சந்­தேக நபர்கள் ஸ்தலத்தில் இருந்து தப்பிச் சென்­றுள்ள நிலையில், காய­ம­டைந்த­வர்கள் முதலில் பிலி­யந்­தலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்டு பின்னர் களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

(எம்.எப்.எம்.பஸீர்

No comments

Powered by Blogger.