Header Ads



5000 ரூபாய் நாணயத்தாள், ரத்துச் செய்யப்படாது - மத்திய வங்கி அறிவிப்பு

தற்போது புழக்கத்தில் உள்ள 5000 ரூபாய் நாணயத்தாளை ரத்து செய்ய தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எனவே தற்போது புழக்கத்தில் உள்ள ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள் பயன்பாடு தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் எழக்கூடிய சாத்தியமில்லை.

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 5000 ரூபாய் நாணயத்தாளில் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் கையொப்பமிட்டுள்ளார்.

சிங்கப்பூர் குடியுரிமையுடைய அர்ஜூன் மகேந்திரனின் கையொப்பத்துடன் கூடிய நாணயத் தாள்கள் சட்ட ரீதியற்றவை என கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

எனினும், இந்த நாணயத் தாள்களின் சட்டபூர்வ தன்மை குறித்து எவ்வித சர்ச்சையும் கிடையாது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கி ஆளுனர் பதவியை பெற்றுக்கொள்ளும் போது அர்ஜூன் மகேந்திரன் குடியுரிமை தொடர்பில் சர்ச்சைகள் கிடையாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.