May 24, 2017

'நாட்டில் அசா­தா­ரண சூழ்­நி­லை'' - 3 பிரதான அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கை

நாட்டில் உரு­வா­கி­யுள்ள அசா­தா­ரண நிலை­யின்­போது முஸ்­லிம்கள் மிக நுணுக்­க­மா­கவும், தூர நோக்­கு­டனும் சிந்­தித்து செய­லாற்­று­வது அவ­சி­ய­மாகும் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா, தேசிய சூறா சபை ஆகி­யன கூட்­டாக அறிக்­கை­யொன்றை விடுத்­துள்­ளன.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் கடந்த சில தினங்­க­ளாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் அடா­வ­டித்­த­னங்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்கு சமூ­கத்தின் அர­சியல் தலை­மைத்­து­வமும் சிவில் தலை­மைத்­து­வமும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

முஸ்­லிம்­க­ளுக்கும் சிங்­கள பெரும்­பான்­மை­யி­ன­ருக்கும் இடையே 1000 வரு­டங்­க­ளுக்கு மேலாக நீடித்­து­வரும் ஒற்­றுமை மற்றும் இன சௌஜன்­யத்தைச் சீர்­கு­லைக்கும் நோக்­கிலும், நாட்டில் குழப்­பத்தை உரு­வாக்கி வேறு சில இலக்­கு­களை அடைந்­து­கொள்ளும் நோக்­கிலும் இந்த அடா­வ­டித்­த­னங்கள் திட்­ட­மிட்­ட­வ­கையில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்­பதே எமது அபிப்­பி­ரா­ய­மாகும்.

இச்­சந்­தர்ப்­பத்தில் முஸ்­லிம்கள் மிக நுணுக்­க­மா­கவும், தூர நோக்­கு­டனும் சிந்­தித்து செய­லாற்­று­வது அவ­சி­ய­மாகும். ஆத்­திரம் மற்றும் அவ­ச­ரப்­பட்டு தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வ­தி­லி­ருந்து தவிர்ந்­து­கொள்­வது அவ­சி­ய­மாகும்.

பல்­வேறு கட்­சி­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா மற்றும் தேசிய சூறாக் கவுன்ஸில் ஆகிய முஸ்லிம் சிவில் சமூ­கத்தின் பிர­தான அமைப்­புகள் மற்றும் புத்­தி­ஜீ­வி­க­ளுடன் இணைந்து இந்த நெருக்­கடி நிலைக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்கு அர­சு­டனும், பாது­காப்புத் துறை­யி­ன­ரு­டனும் பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கின்­றன.

பௌத்த கடும்­போக்கு அமைப்­புகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கின்­ற­போதும், உண்மை நில­வ­ரத்தைப் புரிந்­து­கொண்ட பெரும்­பான்மை சிங்­கள பௌத்த சகோ­த­ரர்கள் இந்தப் பிரச்­சி­னையில் முஸ்லிம் சமூ­கத்­தினை அனு­தா­பத்­துடன் நோக்கி, ஆத­ரவு வழங்கி வரு­கின்­றனர்.

இலங்கை முஸ்­லிம்கள் பௌத்த கடும்­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டு­களால் ஆத்­தி­ர­முற்று, எம்மை ஆத­ரிக்கும் மித­வாத பெரும்­பான்மை சிங்­க­ள­வர்­களை பகைத்­துக்­கொள்ளும் நிலை­யேற்­ப­டாது சிந்­தித்து புத்­தி­சா­துர்­ய­மாக செயற்­ப­டு­மாறும் வேண்­டுகோள் விடுக்­கின்றோம்.

பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கிகள் தமது ஜமா­அத்­துக்கு உட்­பட்­ட­வர்­க­ளுக்கு நாட்டின் அசா­தா­ரண சூழ்­நி­லையை விளக்கி அறி­வூட்­டு­வ­தற்கு நட­வ­டிக்­கை­யெ­டுப்­ப­தோடு, பள்­ளி­வாசல், ஊர், வியா­பார தலங்கள் மற்றும் உடை­மை­களின் பாது­காப்பு குறித்தும் அதிக அக்­க­றை­யோடு செயற்­ப­டு­மாறும் கேட்­டுக்­கொள்­கிறோம்.

உரு­வா­கி­யுள்ள அசா­தா­ரண சூழ்­நி­லைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்டு நாட்டில் சமா­தா­னமும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான சௌஜன்­யமும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஊடக அறிக்கையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.றிஸ்வி முப்தி, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் தலைவர் என்.எம்.அமீன், தேசிய சூறா கவுன்ஸிலின் தலைவர் தாரிக் மஹ்மூத் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ளனர்.

1 கருத்துரைகள்:

மாஷா அல்லாஹ் நல்ல ஏட்பாடு

Post a Comment