Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக 30 நாட்களில் 15 வன்முறைகள் - நல்லாட்சி அரசு மௌனம்

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத, மத­வாத செயற்­பா­டுகள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ள­மை­யா­னது முஸ்லிம் சமூ­கத்தை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது. கடந்த ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் மாத்­திரம் இரண்டு பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் உட்­பட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான 15 முக்­கிய சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில், அவற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொள்­ள­வில்லை என முஸ்­லிம்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

கடந்த காலங்­களில் நாட்டில் இன­வாத கருத்­துக்­களைப் பரப்­பிய பொது பல சேனா மற்றும் சிங்­கள ராவய போன்ற அமைப்­பு­களின் செயற்­பா­டுகள் மீண்டும் வீரியம் பெற்­றுள்­ள­துடன் ஞானசார தேரர் மீண்டும் இன­வாத கருத்­துக்­களைப் பரப்பும் தனது வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்­துள்ளார்.

16.04.2017: 
தென் மாகா­ணத்­தி­லுள்ள கொட­பிட்­டிய, போர்வை நகரில் அமைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 4 கடைகள் மீது அதி­கா­லையில் பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.
17.04.2017 : 
காலி கோட்டை இரா­ணுவ முகாம் பாது­காப்பு வல­யத்தில் அமைந்­துள்ள ஷெய்ஹ் சாலிஹ் வலி­யுல்லாஹ் ஸியா­ரத்தின் பாது­காப்பு மதில்கள் இனந்­தெ­ரி­யாத நபர்­களால் உடைக்­கப்­பட்­டன.
20.04.2017 :
அம்­பாறை, இறக்­காமம், மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான இரண்­டரை ஏக்கர் காணியை ஆக்­கி­ர­மித்து அதில் பௌத்த விகா­ரையை நிர்­மா­ணிப்­ப­தற்­கான ஆரம்பப் பணி­களை பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுத்­தனர். இதனால் அப் பகு­தியில் பதற்ற நிலை ஏற்­பட்­டது.
25.04.2017 : 
அம்­பாறை, இறக்­காமம், மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான இரண்­டரை ஏக்கர் காணியை ஆக்­கி­ர­மித்து அதில் விகாரை நிர்­மா­ணிக்கும் பணி­களை பார்­வை­யிட பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் அப் பகு­திக்கு விஜயம் செய்தார். அத்­துடன் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்தில் இடம்­பெற்ற கூட்­டத்­திலும் கலந்து கொண்­ட­துடன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பூட்டும் கருத்­துக்­க­ளையும் அக் கூட்­டத்தில் வெளி­யிட்டார். நாட்டில் மேலும் 10 ஆயிரம் பௌத்த விகா­ரை­களை அமைக்கத் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
03.05.2017 : 
இறக்­காமம் பகு­தியில் அத்­து­மீறிப் பிர­வே­சித்து இன முரண்­பாட்டைத் தோற்­று­விக்க முனையும் ஞான­சார தேர­ரையும் சிங்­கள ராவய பிக்­கு­க­ளையும் கைது செய்ய வேண்டும் என அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான எச்.எம்.எம்.ஹரீஸ் பாரா­ளு­மன்­றத்தில் வேண்­டுகோள் விடுத்தார்.
08.05.2017 :
இலங்கை கடற்­ப­ரப்பில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் அக­தி­களை மீண்டும் அவர்­க­ளது நாட்­டுக்கே திருப்­பி­ய­னுப்ப வேண்டும் எனவும் அக­திகள் எனும் போர்­வையில் முஸ்­லிம்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மிக்க முயற்­சிப்­ப­தா­கவும் கொழும்பில் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் மாநாட்டில் பொது பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் தெரி­வித்தார்.
10.05.2017 : 
இறக்­காமம் மாயக்­கல்லி மலையில் வெசாக் தினத்தை முன்­னிட்டு பொலிஸ் பாது­காப்­புடன் விசேட பௌத்த வழி­பா­டுகள் இடம்­பெற்­றன. 
14.05.2017 : 
பொலன்­ன­றுவை, ஓனே­கம பகு­திக்கு விஜயம் செய்த பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் அப் பகு­தியில் வசிக்கும் முஸ்­லிம்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்­த­துடன் மாட்டுக் கொட்­டில்­க­ளையும் கழற்றி எறிந்­தனர்.  இதன்­போது 'அல்லாஹ்'வை அவ­ம­திக்கும் வகை­யி­லான வெறுப்புப் பேச்­சுக்­களை ஞான­சார தேரர் பேசினார்.
15.05.2017 :
தோப்பூர் நீணாக்­கேணி பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் பூர்­வீ­க­மாக பயிர்ச் செய்­கையில் ஈடு­பட்­டு­வரும் குடி­யி­ருப்புக் காணியில் பௌத்த பிக்­குகள் அத்­து­மீறிப் பிர­வே­சித்து வேலி­களை உடைத்­தெ­றிந்­தனர்.
15.05.2017 : பாணந்­துறை பழைய பஸார் பகு­தியில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் மீது அதி­காலை 3 மணி­ய­ளவில் பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. இதில் பள்­ளி­வா­சலின் உட்­ப­கு­திகள் சேத­முற்­றன. சந்­தேக நபர்கள் எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.
16.05.2017 : 
கொழும்பு, வெல்­லம்­பிட்டி, கொஹி­ல­வத்தை அல் இப்­ரா­ஹீ­மிய்யா ஜும்ஆ பள்­ளி­வாசல் மீது அதி­காலை 1.45 மணி­ய­ளவில் சுமார் 8 பேர் அடங்­கிய குழு­வினர் தாக்­குதல் நடத்­தினர். இதில் பள்­ளி­வா­ச­லுக்கு சேதம் ஏற்­பட்­டது. இது­வரை எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.
16.05.2017 :
பொது பல சேனா அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றி ஞான­சார தேரர், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் இஸ்­லாத்­துக்கு எதி­ரா­கவும் வெறுப்­பூட்டும் கருத்­துக்­களை முன்­வைத்­த­துடன் 'அல்லாஹ்'வை அவ­ம­திக்கும் கருத்­துக்­களை மீண்டும் வெளி­யிட்டார்.
16.05.2017 : 
செல்­வ­நகர், நீணாக்­கேணி பிர­தே­சத்­திற்குள் கூரிய ஆயு­தங்கள் மற்றும் தடி­க­ளுடன் நுழைந்த சுமார் 200 பேருக்கும் மேற்­பட்ட கும்பல் அப் பகு­தியில் வாழும் முஸ்­லிம்­களின் வீடுகள் மீது தாக்­குதல் நடத்­தினர். இதில் சிலர் காய­ம­டைந்­த­துடன் 16 வீடுகள் சேத­ம­டைந்­தன. அன்­றி­ரவு அக் கிராம முஸ்­லிம்கள் அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறி பள்ளிவாசலிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர்.
17.05.2017 : 
பாணந்துறை, எலுவில பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பேக்கரி ஒன்றும் தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றும் பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகின. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. 
18.05.2017 : 
வென்னப்புவவில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான லாஸ்ட் சான்ஸ் எனப்படும் வர்த்தக நிலையம் அதிகாலை 2 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டது. விடிவெள்ளி

No comments

Powered by Blogger.