Header Ads



சிலாபத்தில் 200 கோடி ரூபா ஹெரோயின் - திடுக்கிடும் தகவல் வெளியானது..!

பாகிஸ்­தானிலிருந்து கடல்­மார்க்­க­மாக கொண்­டு­வ­ரப்­பட்ட சுமார் 200 கோடி ரூபா பெறு­ம­தி­யான ஹெரோயின் போதைப்பொரு­ளை கடந்த வியா­ழ­னன்று புத்­தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­ல­கத்தின் கீழ் இயங்கும் விசேட உளவுப் பிரி­வினர் கைப்­பற்­றிய நிலையில், அதன் பின்­ன­ணியில் உள்­ள­தாக நம்­பப்­படும் பாயிஸ் பாய் குறித்து பல தக­வல்­களை பொலிஸார் வெளிப்­ப­டுத்­தியுள்­ளனர். பாகிஸ்­தானி­ய­ரான குறித்த நபர் டுபாயில் தங்­கி­யி­ருந்து இந் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­துடன் நாட்­டுக்குள் அவ­ரது போதைப்பொரு­ளை விற்­பனை செய்யும் முன்­னணி வர்த்­த­கர்கள் பலர் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்பட்­டுள்­ளது. 

குறித்த போதைப்பொரு­ளுடன் கைதுசெய்­யப்பட்ட தெஹி­வளையைச் சேர்ந்த வாகன உதி­ரிப்­பாக வர்த்­த­கரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரணை செய்­ததில் இந்த தக­வல்­கள் கிடைத்துள்ளன. பாயிஸ் பாயை குறித்த வர்த்­தகர் வாகன உதி­ரிப்­பாக விவ­காரம் தொடர்பில் வெளி­நாடு செல்­வ­தாக தெரி­வித்து பல தடைவை சந்­தித்­துள்­ள­மையும் டுபாயிலுள்ள பிர­பல ஹோட்டல் ஒன்றில் பாய் போதைப்பொருள் முக­வர்­களை சந்­தித்­துள்­ளமை தொடர்­பிலும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்­த­ானி­லி­ருந்து கடல்மார்க்­க­மாக ஹெரோயின் போதைப்பொரு­ளினை நாட்­டுக்குள் கடத்தும் சம்­பவம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் புத்­தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்­பிக்க சிறி­வர்­த­ன­வுக்கு தகவல் கிடைத்­தி­ருந்­தது. அதன்­படி பிரதிப்  பொலிஸ் மா அதி­பரின் கீழுள்ள உளவுப் பிரிவு ஊடாக இந்த தகவல் சேக­ரிக்­கப்பட்­டி­ருந்­தன. இந் நிலையில் வட மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜே­கு­ண­வர்­த­்தனவின் நேரடிக் கண்காணிப்பில் புத்­தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்­பிக்க சிறி­வர்­த­னவின் கீழ் உளவுத் துறை பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சுனில் ஜய­லதில தலைமையிலான குழுவினால் முன்­னெ­டுக்­கப்பட்­டது.

கடந்த 11 ஆம் திகதி  அதி­காலை இப் போதைப் பொரு­ளா­னது, பாகிஸ்­தானிலிருந்து கப்பல் ஒன்­றூ­டாக கொண்டு­வ­ரப்பட்டு நடுக்­க­டலில் வைத்து சிறிய மீன்பிடி பட­கொன்­றுக்கு மாற்­றப்பட்டு குறித்த தீவுக்கு கொண்டுவரப்பட்­டுள்­ளமை ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களிலிருந்து தெரி­ய­வந்­துள்­ள­தாக உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து கடந்த 10 ஆம் திகதி இரவு கொழும் பிலிருந்து சிலா­பத்­துக்கு டிபண்­டரில் வந்­துள்ள சந்­தேகநபர் ஹோட்டல் ஒன்றில் தங்­கி­யி­ருந்­து அதி­காலை குறித்த தீவுப் பகு­திக்கு சென்று ஹெரோ­யினை கையேற்று டிபண்­டரில் கொழும்பு நோக்கி பய­ணிக்க முற்­பட்ட போதே கைது செய்­யப்­பட்­டுள்ளார். அவரே தற்­போது தடுப்பில் உள்ள உதி­ரிப்­பாக வர்த்­த­க­ராவார்.

இந் நிலையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் பாயிஸ் பாய் மற்றும் அவருடன் தொடர்பில் உள்ளதாக நம்பப்படும் மதூஷ் தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எப்.எம்.பஸீர்)

1 comment:

  1. Have to kill them all. We need someone like Rodrigo Duterte,the Filipino president to tackle these drug issues.

    ReplyDelete

Powered by Blogger.