Header Ads



15 வயது மாணவிக்கு மூளை புற்றுநோய் - சில தினங்களில் வந்துகுவிந்த 30.000 கடிதங்கள்

நெதர்லாந்து நாட்டில் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிந்த இறுதி கருத்து ஆயிரக் கணக்கான நல் உள்ளங்களிடம் இருந்து அவருக்கு ஆறுதல் கடிதங்களை வரவழைத்துள்ளது.

நெதர்லாந்தின் Sabine Wortelboer என்ற 15 வயது இளம்பெண் மூளை புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இவரது சகோதரரின் வேண்டுகோளுக்கிணங்க சிறப்பு சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பொருட்டு பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி அமெரிக்காவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

ஹூஸ்டனில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சபைன், சில நாட்களில் தமது உடலில் மருத்துகள் எதுவும் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் சபைன் தமது பேஸ்புக் பக்கத்தில் இதுவரையான தமது போராட்டம் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.

அதில் புற்றுநோயை வென்று மீண்டும் புது வாழ்க்கையை வாழ தமது ஆவலையும் வெளிப்படுத்தியிருந்தார். இவரது குறித்த பதிவுக்கு ஆயிரக்கணக்கானோர் ஆறுதல் கடிதங்களை அனுப்பியுள்ளனர். இதில் செவ்வாய்க்கிழமை காலையில் மட்டும் சுமார் 33,000 கடிதங்கள் வந்து குவிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கடிதங்கள் அனைத்தையும் வாசித்து முடிக்கும் அளவுக்கு தமது மகளுக்கு கால அவகாசம் இல்லை என அவரது தாயார் தமது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

1 comment:

  1. Ask her acknowledge Islam and conquer in the day of judgement.

    ReplyDelete

Powered by Blogger.