Header Ads



12 மணி நேர அறுவை சிகிச்சை, 6 முறை மாரடைப்பு - உயிர்பிழைத்த அதிசய குழந்தை

மகாராஷ்டிர மாநிலத்தில் விசாகா -வினோத் என்ற தம்பதிக்கு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்ட 45-வது நாளிலேயே குழந்தை வாந்தி எடுத்து மயக்கமடைந்தது. பின், குழந்தை பிறந்த, அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து, குழந்தைக்கு நடத்தப்பட்ட சோதனையில் அதன் இதயம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 12 மணி நேர அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் இதயம் நார்மல் ஆனது. ஆனால், அதன் நுரையீல் சீராகவில்லை. இதன் காரணமாக குழந்தையின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரித்தது. இதனால் கடந்த 50 நாள்களுக்கு மேலாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அந்த குழந்தைக்கு 6 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பின் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். குழந்தைக்கு வென்டிலேட்டர் பொறுத்தப்பட்டது. இதன்பிறகு, குழந்தையின் நுரையீரல், தற்போது சரியாக இயங்கி வருகிறது. குறிப்பாக, குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு பெற்றோரிடம் பணம் இல்லை. பல்வேறு தரப்பில் இருந்து கிடைத்த நன்கொடையை வைத்துதான் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments

Powered by Blogger.