Header Ads



மேதின சேவையில் 11.000 பஸ்கள் - பலகோடி ரூபா வருமானம்

மே தினத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட பஸ்களின் அடிப்படையிலேயே, 40 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

சுமார் 4,000 பஸ்கள் கட்டணம் அறவிடப்பட்டு, பத்து அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன கூறியுள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் 7000 பஸ்களை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மே தினத்தை முன்னிட்டு இரண்டு புகையிரதங்கள் அரசியல் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட புகையிரத சேவையின் மூலம் சுமார் 700,000 ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே. இதிபாலகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த விசேட புகையிரத சேவை மருதானை முதல் குருநாகல் நகருக்கும், மருதானை முதல் கண்டிக்கும் பயணிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.