Header Ads



1000 மெற்றிக்தொன் பேரிச்சம்பழம், குறைவாகவே கிடைக்கும்

இம்முறை இலங்கைக்கு வருடாந்தம் 2500 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்களை அன்பளிபுச் செய்துவந்த சவூதி அரேபியா இம்முறை 1500 மெற்றிக்தொன் பேரீச்சம்பழங்களை வழங்கவிருப்பதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் பாஹிம் கூறினார்.

சிரியா நாட்டிற்கு இம்முறை சவூதி அரேபியா பெருந்தொகை பேரிச்சம் பழத்தை அன்பளிப்புச் செய்வதாலும், இன்னும் காரணிகளாலும் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பேரீச்சம்பழத்தின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

அதேவேளை சவூதியின் பேரிச்சம்பழ அள்பளிப்பு குறைவடைந்தாலும், சிறப்பு அமைச்சரவைப் பத்திரமொன்றின் மூலம் பேரிச்சம்பழத்தை இறக்குமதி செய்யவும், அதனை குறைந்த விலையில் சதோச விற்பனை நிலையங்களில் முஸ்லிம்கள் கொள்வனவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் மேலும் கூறினார்.

3 comments:

  1. May Allah Bless Saudi Arabia and its peoples generosity in helping Muslims around the world in preparation for RAMADAN.

    ReplyDelete
  2. Only poor people has to buy from Sathosa though it is provided as gift but it will be available free on elites dining table in ample free of charge.

    ReplyDelete

Powered by Blogger.