May 30, 2017

சம்மாந்துறை - அக்கரைப்பற்று பகுதிகளில் 1000 தமிழ் குடும்பங்கள் மதமாற்றம்


 எந்த இனத்தையும் அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் தமிழர்கள் அல்ல எனவும் மாறாக தமிழ் மக்கள் மீதே கட்விழ்த்து விடப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் தற்போதும் இடம்பெற்று வருவதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.


கடந்த 1956ஆம் ஆண்டு இனரீதியான பிரச்சினைகள் ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரைக்கும் தமிழர்கள் வாழ்ந்த பல கிராமங்களை இழந்தவர்களாகவும், வெளியேற்றப்பட்டவர்களாகவும், பல உயிர்களை பறிகொடுத்தவர்களாகவும் அம்பாறை மாவட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

சிவநெறி அறப்பணி மன்றம் நடாத்தும் வேப்பையடி பிள்ளையார் அறநெறி பாடசாலை கட்டடத்திறப்பு விழாவானது 15 ஆம் கிராம வேப்பையடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் சிவநெறி அறப்பணி மன்றத்தலைவர் சைவ வித்தகர் யோ.கஜேந்திரா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த 1956 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தின் நகர்ப்பறமாக இருந்த இடங்களில் எமது இனம் செறிவாக வாழ்ந்திருக்கின்றது. ஆனால் இங்கிருந்த தமிழர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டதன் நிமிர்த்தம் இன்று அங்கு இருந்த பழமையான ஆலயமும், மகாவித்தியாலயமும் வெறுமனே காட்சிப்பொருளாக காட்சியளித்துக்கொண்டு இருக்கின்றது. அம்பாறை நகர்ப்புறத்தில் இருந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் பிற்பாடு குறிப்பிட்ட தமிழர்கள் புதியவளத்தாப்பிட்டி, மட்டக்களப்பு, திருக்கோயில் போன்ற இடங்களிலும் குடியேறி வாழ்ந்து வருகின்றார்கள்.

அது மாத்திரமல்ல தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பழமையான பல கிராமங்கள் இருந்த இடமே தெரியாதயாதபடி அழிக்கப்பட்டிருக்கின்றது. முன்னைய ஆட்சிக்காலத்தில் ஆலயங்களில் ஒளிபெருக்கி ஒலிப்பதற்குக்கூட முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை இருந்ததோடு மக்களை அழைத்து ஒரு ஒன்று கூடலை நடத்தி கருத்துக்கூற முடியாத நிலையிலே வாழ்ந்து வந்தார்கள் இவ்வாரான பல அசௌகரியங்களை தமிழ் மக்கள் எதிர்கொண்டு வாழ்ந்தார்கள்.

நாங்கள் திட்டமிட்ட முறையிலே கலாசார ரீதியாக, அபிவிருத்தி ரீதியாக, அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்ட வரலாறுகள் நிறையவே உண்டு இன்று சில தமிழ்க்கிராமங்கள் தமிழ் பெயருடன் மாத்திரம் இருக்கின்றது. ஆனால் அங்கு தமிழர்கள் இல்லை என்ற மனவேதனையான விடயங்களையும் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். நிந்தவூர் என்பது தமிர்கள் வாழ்ந்த ஒர் இடம் ஆனால் இன்று நூற்றுக்கும் உற்பட்ட குடும்பங்களே வாழ்ந்து வருகின்றார்கள்.

அண்மையில் அங்கு ஒரு கசப்பான ஒரு நிகழ்வு நடந்தேறியது அங்கு வாழும் தமிழர்களுக்குரிய 2 ஏக்கர் பரப்பைக்கொண்ட மயானக்காணியை சுவீகரிக்கும் நோக்குடன் சில அரசியல் வாதிகள் திட்டமிட்டு ஒரு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காகவேண்டி அபகரித்த காணியை அபகரித்த சம்பவம் நடந்தேறி இருக்கின்றது. எங்களுடன் பேசி எங்களுடன் உறவாடுகின்றவர்கள் இவ்வாரான கபளீகரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற விடயமானது மனவேதனை தரும் செயற்பாடாகவே அமைந்து காணப்படுகின்றது.

எமது தமிழ்த்தேசிய அரசியலை பொறுத்தமட்டில் நாங்கள் சகோதர முஸ்லிங்களுடன் இணைந்து ஒரு தேசியப்பிரச்சனைக்கு நல்லிணக்கம் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தாலும் கூட அவர்கள் தற்காலத்திலும் அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்டவர்களாகவே தங்களது பணிகளை செய்து வருகின்றார்கள். நாங்கள் எந்த இனத்தையும் அடிமைப்படுத்தக்கூடிய விதத்தில் எந்த செயற்பாடுகளையும் முன்னெடுத்தவர்கள் அல்ல.

இன்று இந்த நாட்டில் சிங்களவர்கள், முஸ்லிங்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்கள் புண்படும் விதத்தில் எந்த செயற்பாடுகளையும் முன்னெடுத்தவர்கள் அல்ல மாறாக இவர்கள் தான் எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஆக்கிரமிப்புக்களை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். இன்று எமது இளைஞர்களும், யுவதிகளும் தொழில்வாய்ப்பற்ற நிலையிலே மாற்று சமூகங்களிடத்தே குறைந்த ஊதியத்துடன் வேலை செய்யவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை இருந்து கொண்டு வருகின்றது.

இதனை ஓரளவு தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் புலம்பெயர் தேசத்தில உள்ள தனவந்தர்கள் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி எமது யுவதிகளை மதமாற்றத்தில் இருந்து காப்பாற்ற முன்வரவேண்டும்.

சம்மாந்துறை, அக்கரைப்பற்று போன்ற இடங்களில் 1000க்கும் மேற்பட்ட தமிழ்க்குடும்பங்கள் குடும்பம் குடும்பமாக திட்டமிட்ட முறையில் மதமாற்றங்களுக்குள்ளாகி இருப்பதனை காணமுடிகின்றது அவ்வாரானவர்களை மதமாற்றத்தில் இருந்து தடுப்பதற்கு ஆலயங்கள், இந்து அமைப்புக்கள் கிராமம், கிராமமாக சென்று உழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

10 கருத்துரைகள்:

i know especially in easetrn province radical islamists are targeting the poor tamils to convert.
This need to stopped by forming a new rule.
And all the tamils who converted to islam should be converted to tamilians and all the needs have to be provided.
Muslims are targeting only the poor people.
These thing should be prevented in the future.
It shows the radical and bloody face of islam

மன்னிக்கவேண்டும் ஐயா

நீங்கள் அரசியல் இலாபம் தேட இனங்களுக்கிடையில் முரண்பாடை உண்டக்கி அதில் குளிர்காய வேண்டாம் முஸ்லிம்கள் எந்த மதத்தையும் அடிமை படுத்தவில்லை ஒருவர் அவருடைய சுய புத்தியை கொண்டு அவருடைய பூரண சம்மதத்துடன் தான் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு இணங்கி தான் வருகிறார் மாறாக நீங்கள் கூறுவதுபோல் அல்ல

முஸ்லிம்களுக்கி நீங்கள் செய்த கொடுமை சொல்லில் அடங்காது யாழ்பாணம் , வவுனியா ,மூதூர்,காத்தான்குடி போன்ற ஊர்களில் எங்கள் சொந்த நிலங்கள் ,உடமை உயிர் போன்ற எல்லாவற்றையும் அபகிர்த்து கொண்டு 2 மணி நேரத்துக்குள் துரத்தி அடிதீர்கலே எங்களுடைய உறவுகளை கடத்தி கொண்டுபோநீர்கள் எந்தனையோ அணியாம் செய்தீர்கள் அதற்கு என்ன பதில் ஐயா

Force full conversion and Conversion by choice are different.

If force full conversion is done No question.. It is wrong
If conversion by choice.. It is their freedom. No one has the right to stop an individual from his will.

May God Direct us to worship him alone.

உங்களை யார் ஆயுதமேந்த சொன்னது? உங்கள் சமூகத்தை நீங்களே தீவிரவாதம் செய்து அழித்துவிட்டு மற்ற சமூகங்களை குறைகூற வெட்கமில்லையா தமிழ் தீவிரவாதிகளே?

அனுசாத் நான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவன் முடியுமானால் அவ்வாறு பணத்தாசை காட்டி முஸ்லிமாக மாற்றப்பட்ட ஓர் தமிழரின் விபரத்தைத் தர முடியமா அவ்வாறு மதமாற்றப்பட்டிருந்தால் அவரை அவருக்கு விரும்பியதை பின்பற்றச் சொல்லவும் அவருக்கு வோண்டுமான அனைத்தையும் செய்ய நாங்கள் தயார் சகோதரரே ஒன்றை மட்டும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் உலகில் உள்ள மதங்களில் ஒர் நபர் வார்த்தையில் மாத்திரம் மதம் மாற்ற அல்லது மாற முடியாத ஓரே ஒரு மார்க்கம் இஸ்லாம் இதை விளங்கி மாறலாமே அன்றி (சிலர் திரமண நோக்கத்தில் நடிப்பவர்கள் உண்டு) வலுக்கட்டாயத்தில் மாற்ற முடியாது

அம்பாறையில் 40%இருக்கும்போதே இவர்கள் தமிழரை அழிக்க துடிக்கின்றனர்.கிழக்கில் தமிழ் சிறுமிகள் கூட சுதந்திரமாக நடமாட முடியவில்லை.வடக்கு கிழக்கு இணையாவிட்டால் கூட அது தமிழரை பாதிக்காது ஆனால் தனி கரையோர மாவட்ட கோரிக்கையை தமிழர் ஆதரிக்க கூடாது.

For your Info.
Yesterday, three tamil girls were raped three muslim teenages.
This is a type of genecide which is done by muslims agaibst tamils.
First of all muslims should behave in good manner before they talk about others.
Once again muslims are targeting tamils only whether its land or religion.
We have to be aware of this to last long the hinduism and tge culture.

Bro Anusath....see the above news by Jaffna Muslim. ...those girls were not raped by Muslim's. The girls themselves have stated those Muslim boys were not the rapists. Thus maybe done by some ppl who want to break the good understanding and the peace that is there between the Muslims and the tamils. We must undrstand this and not fight against each of us

@ Chandra pal yes please donate them generously. DOnt be stingy. Then you can keep them as Hindu.
Muslims don't need to change people with money. That's Christians missionaries Job.
Please be generous specially towards upcountry Tamils. I have seen them on my own eyes. Wonderful people yet poor.
You guys don't even spend a dime on yourself how will you spend on others?

வட கிழக்கு இணைப்பும் வேண்டாம், தனி கரையோரமும் வேண்டாம், கனவு சமஸ்டியும் வேண்டாம் இருப்பவை இப்படியே இருக்கட்டும்

Post a Comment