April 26, 2017

நல்லாட்சியில் ஹீரோவான ஞானசாரர் - VIP அந்தஸ்த்தும் கிடைத்தது

ஞானசார தேரருக்கு மாவாட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டளையிடும் அளவுக்கு அதிகாரத்தை வழங்கியது யார் என நல்லாட்சியில் ஒட்டியுள்ள 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்வி எழுப்ப வேண்டும் என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரியுள்ளார்.

இது தொடர்பில்  அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஞானசார தேரருக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் டபுள் ப்ரோமோஷன் வழங்கப்பட்டுள்ளது. நல்லாட்சி பங்காளிகளில் ஒருவரான  ஞானசார தேரர் அவரது வேலையை அரச உயர் மட்டத்தில் இருந்து தற்போது செயல்படுத்தி வருவது தெளிவாக தெரிகிறது. 

மஹிந்த ராஜபச்ஷ காலத்தில் ஊர் ஊராக கத்தித் திரிந்தவர் இப்போது அரசாங்கத்தின் உயர் மட்ட கூட்டங்களில் பிரதான பாத்திரம் ஏற்று கலந்துகொள்கிறார். அதிகாரிகளை மிரட்டுகிறார். கட்டளையிடுகிறார்.ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் கூட்டங்களில் அவருக்கு முன்வரிசை வீ ஐ பி ஆசனம் வழங்கப்படுகிறது.

மஹிந்த ஆட்சியில் இல்லாத அளவுக்கு ஞானசார தேரருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவரது கோரிக்கைகளும் தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகிறது.வில்பத்து விவகாரத்தில் இருந்து இறக்காமம் மாணிக்கமடு விடயம் வரையில் அவர் தலையிடும் அளவுக்கும் விடயம் கைமீறி போய் உள்ளது.

குடிவரவு திணைக்களத்துக்கு சென்று அவர் வழங்கிய அறிவுரைகளுக்கு அமைய தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களின் வீசா கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

இனிமேலும் நாம் பொறுமை காக்க கூடாது,பொலிஸ் உயரதிகாரிகள் முன்னிலையில் நீதிமன்ற உத்தரவை கிழித்து எரியுந்துவிட்டு தைரியமாக உலவும் அளவுக்கு அவருக்கு இந்த நாட்டில் அதிகாரங்களை வழங்கியது யார் என அரசாங்கத்தில் ஒட்டியுள்ள 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்வி எழுப்ப வேண்டும் என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரியுள்ளார்.

5 கருத்துரைகள்:

Good Article. If they (21 MPs)read this, they have no option other than leaving the Yahapalanya Jokers (My3 & Ranil)

இவன்தான் நாட்டின் தற்போதைய உப ஜனாதிபதி அதனால் அவனுக்கு அதிகாரம் இருக்கிறது,இதை வழங்கியது நாம் உருவாக்கிய அரசாங்கத்தின் ஜனாதிபதி, இனி முஸ்லீம்களின் வேலை இந்த அரசாங்கத்தை நாசமாக்குவாயாக என்று அல்லாஹ்விடம் பிராத்திக்க வேண்டும்,அதை தவிர இந்த அரசாங்கத்தால் நமக்கு எந்த நன்மையும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.அதற்கான முதுகெலும்பு உள்ள முஸ்லீம் எம்பீக்களும் இல்லை.ஆகவே முஸ்லீம்களே இந்த அரசாங்கம் மண்ணை கவ்வ இரவும் பகலும் சுஜுதில் அல்லாஹ்விடம் இரைஞ்சுங்கள்.வேறு வழி இல்லை,யா,அல்லாஹ் இந்த அரசாங்கத்தை நாசமாக்குவாயாக,எங்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று எங்களுக்கு துரோகம் செய்யும் இந்த சதிகார அரசையும் அரசர்களையும் நீயே பார்த்துக் கொள்வாயாக.ஆமீன்.வரும் றமளான்தான் இந்த அரசாங்கத்தின் கடைசி றமளானாக இருக்கும்,இன்ஷாஅல்லாஹ்,

One of the reasons (hidden behind the curtain) , for
the victory of this govt is , GNANASARA. It was he
who forced Muslims to turn against Mahinda and to
seek REFUGE in My3 Ranil camp . Muslims have no sole
right to claim credit for the ouster of Mahinda and
it is foolish to claim like that. It was a political
twist which pushed us running to safety from Mahinda
who could not manage the situation. The same
Gnanasara is still capable of repeating the same game
against My3 and Ranil . A TWO IN ONE GAME ! Politics
and Religion at its best . Stop Muslims' advance by
bringing in the party of his interest. REMEMBER VERY
WELL , IF IT WAS NOT GNANASARA, NOLIMIT, FASHION BUG
AND BAIRAHA MIGHT HAVE BRANCHED OUT BY DOZENS BY NOW.
And many more Muslim businesses might have flourished
spreading all over the country . Good or Bad ?? Can
argue both ways ! Good , if the country has full
blown democracy with ECONOMY as its only focal point.

i am not Mahinda funy but Mahinda never talk straightly with terrorist Gnasara.

Most dangerous person against Muslims is incumbent President Maithripala Sirisena.He is not common candidate but he is the biggest conspiracy and he deceived not only Muslims but also 6.2 million voters who selected him to president.He wants to revenge those who defeated his party SLFP and his leader Mahinda.First he neglected UNP,criticized FCID,appointed Mahida's man Hisbullah but ignored his staunch supporter Asad Sally.Confiscating Muslims land in the name of forest preservation and now for religious purpose.In short he is leading the Sinhele campaign.

These destruction is brought one by Muslim Congress and Ashraff. other is Jamiathul Ulama's Geneva visit.SLFP is created on the basis of racism and anti minority.So Muslims are 100% UNPiers without which no party can have majority.So what Ashraff did was grabbed the UNP votes in the name of Muslim congress and turned it as a SLFP votes and strengthen anti Muslim SLFP.Had not Muslim Congress,there is no Hela Urumaya,BBS or Rawana Balaya.Ashraff started communal politics.Now it is finished because of Muslim congress we are loosing one by one nothing gained.

Post a Comment