Header Ads



UNP க்கும், கூட்டு எதிர்க்கட்சிக்கும் உடன்பாடு - கதைவிடும் டிலான்

கூட்டு எதிர்க்கட்சியினர் மே தினக் கூட்டத்தை நடத்த காலிமுகத் திடலை வழங்கியதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையில் காணப்படும் உடன்பாடு மேலும் உறுதியாகியுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, கூட்டு எதிர்க்கட்சிக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தாலும் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு வரும் மக்கள் எண்ணிக்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே சேரும் என அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரான ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனடிப்படையில், கண்டி கெட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ள சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கும் கூட்டு எதிர்க்கட்சியின் காலிமுகத்திடல் கூட்டத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை கூட்டினால், கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. BANKRUFT POLITICIAN.RANIL NOT GIVING ANY CHANCE TO YOU.YOUR WORST MR PARTY.

    ReplyDelete

Powered by Blogger.