Header Ads



குப்பை மேடு விபத்து, இயற்கையானதல்ல - JVP

மீதொட்டுமுல்லை பிரதேசத்தில் குப்பை மேடு சரிந்ததில் ஏற்பட்ட விபத்து இயற்கையான விபத்தல்ல எனவும் அதற்கு ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

மீதொட்டுமுல்லையில் அனர்தத்திற்கு உள்ளானவர்கள் சம்பந்தமாக அரசாங்கம் துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளது.

நாட்டில் இதற்கு முன்னர் மலைகளில் மண்சரிவு ஏற்பட்டது. தற்போது குப்பை மலை சரிய ஆரம்பித்துள்ளது.

சரிந்து விழும் அளவுக்கு குப்பைகள் மலை போல் குவிந்து வருகின்றன. வாழ்வதற்கு இடமில்லாத அவற்றுக்கு அருகில் வாழும் அப்பாவி மக்கள் மீது இந்த குப்பை மலைகள் சரிந்து விழுகின்றன.

உலகில் பல நாடுகள் குப்பைகளை மீள் சுழற்சிக்கு உட்படுத்தி அவற்றை வளமாக மாற்றி வரும் நிலையில், இலங்கையில் குப்பை அனர்த்தமாக மாறியுள்ளது.

குப்பைகளை முகாமைத்துவம் செய்ய நாட்டில் இருந்த அரசாங்கம் தவறியமை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது எனவும் மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

3 comments:

  1. JVP qualified to control waste management islandwide as they have proofed it in an urban council in the southern province a decade ago.

    ReplyDelete
  2. குப்பை மேட்டின் உயர்வு - பண்பாட்டின் சரிவு.

    ReplyDelete
  3. தனி மனிதனாகட்டும் தேசியமாகட்டும், குப்பை மேடுகளின் உயரங்கள் பண்பாடுகளின் சரிவுகளே.

    ReplyDelete

Powered by Blogger.