Header Ads



JVP யின், திட்டம் இதுதான்

அனைத்து பக்கத்திலும் மிகவும் மோசமான ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது மாற்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் எப்படி அந்த பயணத்தை ஆரம்பிப்பதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்  அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

விடுதலை வீரர்கள் தினத்தை முன்னிட்டு மக்கள் விடுதலை முன்னணி நடத்திய நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மேல்வர்க்க ஆட்சியாளர் கைகளில் இருந்து ஆட்சியை உழைக்கும் வர்க்கம் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த அதிகார கைப்பற்றலில் கடந்த கால புரட்சிகர பாதையை உருவாக்கவும். மேல்வர்க்கத்தின் அதிகாரத்தை தக்க வைக்க இந்த நாட்டில் பாரிய யுத்தம் வெடித்தது. இதில் வடக்கில் கிழக்கில் சாதாரண மக்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர். சிங்களவர்களை விடவும் தமிழர்களே இழப்புகளை சந்தித்தனர். 

நாட்டை அபிவிருத்தி செய்வதாக கூறுகின்றனர். வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுள்ளதாக கதைகளை கூறுகின்றனர். ஆனால் இன்று வரையில் நாட்டின் கடன் தொகை அதிகரித்த வண்ணமே செல்கின்றது. எந்த அரசாங்கத்தை அமைத்தாலும் நாட்டின் கடன்தொகை அதிகரித்து செல்கின்றதே தவிர நாடு அழுத்தங்களில் இருந்து இன்றுவரையில் விடுபடவில்லை. ஆனால் இன்று கடன் தொகை அதிகரித்துள்ளது என கூறி மக்களிடம் இருந்து வரிகளை அறவிட்டு ஆட்சி நடத்துகின்றனர். 

அனைத்து பக்கத்திலும் மிகவும் மோசமான ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது மாற்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் எப்படி அந்த பயணத்தை ஆரம்பிப்பது.  ஒரு புறம் ரணில், மைத்திரி, சந்திரிக்கா ஆட்சியில் பயணித்தால் என்ன நடக்கும். அன்று மக்களின்  சொத்தாக இருந்த அனைத்தும் இன்று தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளது. மக்களினதும் அரசினதும் சொத்துக்கள் அனைத்தும் இன்று விற்கப்பட்டுள்ளது. தொழில் பேட்டைகள் அனைத்தையும் விற்றுள்ளனர். இப்போது துறைமுகங்களையும் எண்ணெய் குதங்களையும் இயற்கை வளங்களையும் விற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அவற்றை விற்கும் முயற்சிகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதேபோல் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்பன இன்று தனியார் துரையின் பக்கம்  பயணிக்க ஆரம்பித்துவிட்டது. சாதாரண மக்கள் கல்வி கற்கும் நிலைமை தடுக்கப்பட்டு பிரபுக்கள் மற்றும் கல்வி கற்கும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது .ஆகவே இந்த பாதையில் பயணித்தால் மக்கள் வெகு விரையில் அழிக்கப்படுவர்.  மேல்வர்க்கத்தினர்  நோய்வாய் பட்டால் வெளிநாட்டு மருத்துவங்களை பெரும் நிலைமை உள்ளது. ஆனால் சாதாரண மக்களை தமது நோய்களுக்கான மருத்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மேல் வர்க்கமே ஆட்சியை உருவாக்குகின்றது. 

அன்று நாம் போரட்ட பாதையில் எமது அரசியல் பயணத்தை ஆரம்பித்தோம். எம்மை இலக்கு வைத்து அப்போதைய அரசியல் தலைமைகள் செயற்பட்டன. அதன் பின்னர் நாம் கட்சி ரீதியல் எமது அரசியல் பயணத்தை ஆரம்பித்து இன்றுவரை நகர்கின்றோம். எமது பயணத்தில் மாற்றம் இருந்தாலும் எமது கொள்கை அன்றில் இருந்து இன்று வரையில் ஒரே நோக்கத்திலேய உள்ளது. அதிகாரத்தை கைப்பற்ற நாம் முயற்சிக்க வேண்டும். அதற்கான எமது வர்க்கத்தை இணைக்க வேண்டும். சகல கட்சிகளினதும் அங்கத்துவம் வகிக்கும் அனைவரும்  எமது வகுப்பு மக்கள். அவர்கள் எம்முடன் இணையாது பிரிக்கப் பட்டுள்ளனர். அவர்களை இணைக்க வேண்டும். அதுவே எமது பிரதான இலக்காக இருக்க வேண்டும். 

No comments

Powered by Blogger.