Header Ads



முரளிக்கு (Hall of Fame) - இலங்கை வீரர் தெரிவுசெய்யப்படுவது இதுவே முதல்முறை

இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனை புகழ்பூர்த்தவர்கள் (Hall of Fame) பட்டியலில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இணைத்து கௌரவித்துள்ளது.

ஐ.சி.சி.யின் Hall of Fame விருதுக்கு இலங்கை வீரர் ஒருவர் தெரிவுசெய்யப்படுவது இதேவே முதல்முறையாகும்.

இந்த விரு ஐ.சி.சி.யின் உயர்கௌரவமாக கருதப்படுகின்றது. அதேவேளை, கிரிக்கெட் விளையாட்டிற்கு ஆற்றிய சேவைக்காக வழங்கப்படுகின்ற உயரிய பதவியாகவும் Hall of Fame விருது கருதப்படுகின்றது.

இம் முறை முரளிதரனுடன் சேர்த்து அவுஸ்திரேலியாவின் ஆர்த்தர் மொரிஸ், கரோன் ரோல்டன் மற்றும் இங்கிலாந்தின் ஜோர்ஜ்  லோஹ்மன் ஆகியோரும் இதன் போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்த கௌரவிப்பின் போது ஐ.சி.சி. ஹோல் ஒப் பேம் தொப்பியும் பரிசாக வழங்கப்படும். இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன், 22 முறை 10 விக்கெட்டுகளையும் 67 முறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இந்த கௌரவிப்பின் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.