Header Ads



GSP பிளஸ் வரிச்சலுகை மூலம், வருடாந்தம் 250 பில்லியன் ரூபா இலாபம்

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 250 பில்லியன் ரூபா இலாபம் கிடைக்கும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கக் கூடாது என முன்வைக்கப்பட்ட பிரேரணை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நேற்று தோற்கடிக்கப்பட்டது.

இந்தப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டமையானது, இலங்கைக்கு கிடைத்த வெற்றி என நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைப்பதனூடாக பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியாக பாரிய நன்மைகள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான அறிவிப்பு அடுத்த மாதமளவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. தானாகவே கிடைக்க வேண்டிய ஒரு வியாபார விடயத்தை இந்த இனத்துவேச அரசாங்கம் முஸ்லிம்களின் சட்டதில் கை வைக்க வந்தது,நாட்டில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் சிறுபான்மை முஸ்லிம்கள் நசுக்கப்படும் நிலையை காணக்கூடியதாக உள்ளது,இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான துவேசம் காட்டும் அரசாங்கம் தற்போதைய அரசாங்கம்தான்.நமக்கு நாமே தலையில் மண்ணை போட்டுக் கொண்ட நிலை ஏற்பட்டுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.