Header Ads



மீதொட்டமுல்லயில் விஷவாயு தாக்கம், குப்பைமேடு வெடிக்கலாம் - ஜப்பான் குழு எச்சரிக்கை

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு இடம்பெற்ற பகுதிகளில் மெதேன் (விஷவாயு) வாயுவின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது. எனவே அதன் தாக்கத்தினால் எந்நேரத்திலும் வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக மீதொட்டமுல்லை குப்பை மேட்டினை ஆய்வு செய்த ஜப்பானிய நிபுணர் குழு அறிவித்தது.

மேலும் மீதொட்டமுல்ல பகுதியில் சிறிய அளவிலேனும் நெருப்பு பற்றக்கூடிய எந்த வொரு பொருளையும் பாவிப்பதானது மிக அவதானமானது எனவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் ஏற்பட்ட அனர்த்தம் குறித்து ஆராய்வதற்காக ஜப்பானிலிருந்து வருகைத்தந்த 13 பேர் அடங்கிய விசேட நிபுணர் குழு இன்றையதினம் மீதொட்டமுல்லையில் ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னரே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலைமை குறித்து ஜப்பானில் இருந்து வருகைத்தந்திருந்த குறித்த விசேட குழுவின் அனர்த்த முகாமைத்துவத்துக்கான விசேட நிபுணர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கருத்து தெரிவிக்கையில்,

மீதொட்ட முல்லை குப்பை மேடு சரிவு ஏற்படுவதற்கான அடிப்படை காரணிகள் குறித்த தரவுகள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே இவ்வனர்த்தம் இடம் பெற்றதற்கான காரணத்தினை தற்போது சேகரிக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் சகல துறைகள் தொடர்பாகவும் எமது குழுவினரால் ஆய்வு செய்யப்படவுள்ளது. குறித்த தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து முழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே இவ்விடயம் தொடர்பிலான காரணத்தினை கண்டறிய முடியும். இந்நிலையில் தற்போதைய நிலையில் இரசாயனக்கழிவுகள் மற்றும் மெதேன் வாயு போன்றவற்றை தவிர்ந்த ஏனைய காரணிகள் சீராக இருப்பதனால் மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்றார்.

வெடிவிபத்து ஏற்படும் அபாயம்

தற்போது அனர்த்தம் இடம்பெற்ற குறித்த பிரதேசத்தினை ஆய்வு செய்ததன் அடிப்படையில் குப்பை மேட்டினது கீழ் பாகத்தினது இடது முனையில் ஒரு பகுதியிலிருந்து நீர் வெளியேறி வருகின்றது. குறித்த நீரை கால்வாயின் ஊடாக முறையாக வெளியேற்ற வேண்டிய தேவையுள்ளது. 

அத்துடன் அதிகளவிலான மெதேன் வாயுவின் தாக்கம் அந்த பகுதிகளில் காணப்படுகின்றது. குறித்த பிரதேசத்தில் மெதேன் வாயுவின் அளவானது 1.5 ஆக சராசரியாக காணப்பட வேண்டும். எனினும் தற்போது பெறப்பட்டுள்ள ஆய்வின் தரவின் அடிப்படையில் இப்பிரதேசத்தில் மெதேன் வாயுவின் அளவானது 16க்கும் மேற்பட்டளவில் கானப்படுகின்றது. அத்துடன் ஏற்கனவே மக்கள் குடியிருப்புக்கள் கானப்பட்ட பிரதேசம் என்பதால் அப்பகுதிகளில் மலசலகூடக்கழிவுகளும் கானப்படுகின்றமையினால் அவற்றில் இருந்து வெளியேறும் மெதேன் வாயுவின் அளவும் சேர்ந்து உச்சபெறுமானத்தைக்காட்டுகின்றது. 

ஆகவே குறித்த பகுதிகளில் எந்நேரத்திலும் தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்புள்ளதுடன் வெடிவிபத்துக்களும் ஏற்படலாம். இதனால் இப்பகுதிகளில் அகல்வு பணிகளில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினர் அவதானமான செயற்பட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார். 

அகழ்வு பணிகளில் ஈடுபடும் போது பெக்கோ இயந்திரங்கள் வெளியிடும் வெப்பநிலை மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் தொடர்பிலும் அவதானமாக செயற்பட வேண்டும். அத்துடன் குறித்த பிரதேசங்களில் கலந்துள்ள இரசாயணக்கழிவுகளை அகற்றும் வரையில் சிகரட் பாவணையும் இப்பிரதேசங்களில் தடைசெய்யப்படுதல் வேண்டும் எனவும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஜப்பானிய விசேட குழுவினரால் பணிப்புறைவிடுக்கப்பட்டுள்ளது. 

2 comments:

  1. மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.
    (அல்குர்ஆன் : 30:41)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. All world will laugh at us and it is a shame to the ruling government. Sri Lanka is becoming a country like in Africa. Sri Lanka is no longer wonder of Asia anymore.

    ReplyDelete

Powered by Blogger.