Header Ads



சோகங்களுக்கு மத்தியில், அல் - ஹாபிழான சுக்ரா இல்யாஸ்


அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் , தெமட்டகொடை பிரதேசத்தில்  நடாத்தி வரும் அல் -குர்ஆன் மனன வகுப்பில் பலரும் புனித அல் -குர்ஆனை மனனம் செய்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இலங்கை தவ்ஹீத் ஜமாத்தினரால்  'டவர் அரங்கில்' அல் -குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கான கௌரவிப்பு விழாவில் குறுகிய காலத்தில் சம்பூரணமாக அல் -குர்ஆனை மனனம் செய்த பாத்திமா சுக்ரா இல்யாஸ் (அல் -ஹாபிழா) கௌரவிக்கப்பட்டார் .

கொலன்னாவ மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் இவர் கடந்த ஆண்டு க.போ.த சா /த பரீட்சையில் 8A 1C    பெறுபேறுகளை  பெற்றுக் கொண்டு  தற்போது க.போ.த உயார் தர  உயிரியல் பிரிவில் தனது உயர் கல்வியை தொடர்கிறார் . இவரது இலட்சியம் சிறந்த வைத்தியர் ஆவதே .

அண்மையில் தனது அன்புத் தந்தையை இழந்த இவர் தனது தாய் பாத்திமா ஷஹானா காமில் அவர்களுடன் வாழ்ந்து வருகிறார் .அந்த சோகத்துக்கு மத்தியில் இவ்வாறு திறமை காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது .

அவரது இலட்சியம் நிறைவேறி வாழ்க்கை சிறப்புற அனைவரும் பிரார்த்திப்போமாக

2 comments:

  1. வாழ்த்துக்கள் சகோதரி!

    மனித மூளை இறைவனின் அற்புத படைப்புகளில் ஒன்று.எவ்வளவு அறிவுச்சுமைகளையும் தாங்க வள்ளது.

    ஆனால் அதிகமானோர் மூளையின் சிறு பகுதியை மட்டுமே உபயோகிக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.