Header Ads



“எழும்புங்கள்.. எழும்புங்கள்.. சீருடை அணிந்துகொண்டு எங்கும் குணிய வேண்டாம் - ஜனாதிபதி

புத்தாண்டு தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அவரது பாதுகாப்பு குழுவினருக்கும் இடையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இது தொடர்பான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சீருடை அணிந்த பாதுகாப்பு படையினருக்கு கௌரவம் வழங்குவதில் ஜனாதிபதியின் உயரிய குணம் இதன்மூலம் தெளிவாகியுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று வெற்றிலையுடன் ஜனாதிபதியின் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதற்காக பாதுகாப்பு படையினர் முயன்றுள்ளனர்.

இதில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சீருடையில் வருகைதந்த ஏனைய அதிகாரிகளை ஜனாதிபதி காலில் விழ விடாமல் தடுத்துள்ளார்.

“எழும்புங்கள்... எழும்புங்கள்... சீருடை அணிந்து கொண்டு எங்கும் குணிய வேண்டாம்.. வெற்றிலையை கையில் கொடுத்து விட்டு செல்லுங்கள்...” என ஜனாதிபதி குறித்த படையினர் உட்பட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒரு போதும் சீருடையில் வரும் அதிகாரிகளை காலில் விழுவதற்கு அனுமதிக்க மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

சீருடையில் மாத்திரமின்றி அரசியல் பிரிதிநிதிகளையும், ஒருபோதும் ஜனாதிபதி தனது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவதற்கு அனுமதிக்க மாட்டார் என அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

4 comments:

  1. நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள். “நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும், நான் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்” (என்றும்).
    (அல்குர்ஆன் : 11:2)

    ReplyDelete
    Replies
    1. This is their culture. Why did you put this quran verse? Don't expect every one to follow our culture.

      Delete
  2. Didn't you see our President also neglect that he worshipped by others?
    Remember he is a non muslim! Where we are?

    Wherever an opportunity arises to introduce Allah to non muslims we have to use it.

    The way of peace, Islam, we enjoy which is not only belongs to us. But, for all of our fellow human being.

    ReplyDelete

Powered by Blogger.