April 28, 2017

விழுங்கப்படும் நமது பூர்வீகம்

இலங்கை முஸ்­லிம்­களின் பாரம்­ப­ரிய நிலங்­களை விழுங்கி ஏப்­ப­மி­டு­கின்ற பௌத்த பேரி­ன­வா­தத்தின் செயற்­பா­டுகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ண­மே­யுள்­ளன. இந்த முயற்­சி­க­ளுக்கு இறு­தி­யாகப் பலி­யா­கி­யி­ருப்­பதே இறக்­காமம் பிர­தே­ச­மாகும்.

அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற போதிலும் அதனை குறிப்­பிட்­ட­தொரு காலத்தில் சிங்­கள பெரும்­பான்மை மாவட்­ட­மாக மாற்­றி­ய­மைக்­கின்ற திட்டம் கடந்த பல தசாப்­தங்­க­ளுக்கு முன்­னரே வரை­யப்­பட்­ட­தாகும். அந்த திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக செயற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் வர­லாற்றில் தொட­ராக இடம்­பெற்று வந்­துள்­ளன.

கரும்புச் செய்கை என்ற பெயரில் சிங்­கள குடி­யேற்­றங்கள் உரு­வாக்­கப்­பட்­டமை, தீக­வாபி திட்­டத்தின் கீழ் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டமை, தொல்­பொருள் வல­யங்கள் எனும் போர்­வையில் காணிகள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டமை, தமிழ் முஸ்லிம் பகு­தி­களில் சிலை வைக்­கப்­பட்­டமை என இத் திட்­டங்கள் பல்­வேறு படி­மு­றை­களைக் கொண்­டி­ருந்­தன. அதன் மற்­றொரு அங்­க­மா­கவே தற்­போது இறக்­காமம், மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் விகாரை அமைக்கும் நோக்கில் முஸ்­லிம்­களின் காணிகள் பல­வந்­த­மாக பறிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த திட்­டங்­களின் பின்­ன­ணியில் அம்­பாறை மாவட்­டத்தைச் சேர்ந்த பெரும்­பான்­மை­யின அமைச்சர் ஒருவர் இருக்­கின்ற நிலையில், பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வி­னரும் இதில் கைகோர்த்­துள்­ளனர்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அம்­பாறை மாவட்ட செய­ல­கத்தில் அர­சாங்க அதி­கா­ரிகள் அடங்­க­லாக ஞான­சார தேர­ரரும் பங்­கேற்ற கூட்டம் நடை­பெற்­றுள்­ள­மையும் அங்கு அவர் ஆக்­ரோ­ஷ­மாக இன­வாத கருத்­துக்­களைப் பேசி­ய­மையும் நாட­ளா­விய ரீதியில் 10 ஆயிரம் விகா­ரை­களை அமைக்கப் போவ­தாக கூறி­யுள்­ள­மையும் அவ­ரது செயற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்க அனு­ச­ரணை கிடைத்­துள்­ளதை வெளிப்­ப­டுத்தி நிற்­கி­றது. 

கிழக்கு மாகாண சபையில் சிறு­பான்மை மக்கள் பிர­தி­நி­தி­களின் ஆட்­சி­யுள்ள நிலை­யிலும் அம்­பாறை மாவட்­டத்தில் மூன்று முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்­கின்ற நிலை­யிலும் அவர்­களைப் புறந்­தள்ளி, அர­சாங்க அதிபர், காணி ஆணை­யாளர், பொலிஸார் மற்றும் அரச அதி­கா­ரிகள் இன­வாத தேரர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி முஸ்­லிம்­களின் காணி­களை பல­வந்­த­மாக அப­க­ரிப்­ப­தா­னது மிக அப்­பட்­ட­மான மனித உரிமை மீறலும் பகல் கொள்­ளை­யு­மாகும்.

இந்த செயற்­பாட்­டுக்கு ஒரு­போதும் முஸ்­லிம்கள் தரப்பில் அனு­மதி வழங்கக் கூடாது என்­பதே அனை­வ­ரதும் நிலைப்­பா­டாகும். அந்த வகையில் இதற்­கெ­தி­ராக முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து பல­மான எதிர்ப்பு வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

இதன்­பொ­ருட்டு இன்­றைய தினம் அம்­பாறை மாவட்­டத்தில் ஜும்ஆ தொழு­கையின் பின்னர் நடைபெறவுள்ள அமைதிப் பேர­ணி­களில் அனை­வரும் பங்­கேற்று தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்த வேண்டும்.

இதற்­கப்பால் இந்த பார­தூ­ர­மான ஆக்­கி­ர­மிப்பை தடுத்துநிறுத்த 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­று­பட்டுச் செயற்­பட முன்­வர வேண்டும். குறிப்­பாக அம்­பாறை மாவட்ட முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள் இது­வி­ட­யத்தில் தமது கூட்டுப் பொறுப்பை உணர்ந்து செயற்­ப­டு­வார்கள் என நம்­பு­கிறோம்.

துர­திஷ்­ட­வ­ச­மாக முஸ்லிம் அர­சி­யலில் நிலவும் போட்டி அர­சியல் கார­ண­மாக எந்­த­வொரு பொதுப் பிரச்­சி­னை­யிலும் ஒன்­று­பட்டுச் செயற்­ப­ட­மு­டி­யாத நிலை தோன்­றி­யுள்­ளது. முசலி வர்த்­த­மானி பிர­க­டனம் தொடர்பில் நேற்று இடம்­பெற்ற கூட்­டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தரப்­பு­க­ளுக்­கி­டையில் நடந்த குழப்பம் இத­னை­யே வெளிப்­ப­டுத்தி நிற்­கி­றது.

நமது மக்­களின் பூர்­வீக நிலத்தை மீட்­கின்ற செயற்­பா­டு­களில் கூட ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்புடன் செயற்படாது கட்சி அரசியலையே முன்னெடுப்பார்களாயின் இவர்களிடமிருந்து சமூகம் எவ்வாறு தீர்வை எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்த மோசமான அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காதவரை முஸ்லிம் சமூகத்தின் பூர்வீகம் இனவாதிகளால் விழுங்கி ஏப்பம் விடப்படுவதை ஒருபோதும் தவிர்க்க முடியாது போய்விடும்.

விடிவெள்ளி பத்திரிகை, வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

7 கருத்துரைகள்:

மாறிமாறி வரும் அரசாங்கத்தோடு போட்டி போட்டுக்கொண்டு நான் முந்தியா நீ முந்தியா என்று ற,ஹகீமும்,றி பதுர்தீனும் அமைச்சு பதவிக்கும்,சுக போக வாழ்க்கைக்கும்,தாங்களும் தாங்கள் சார்ந்தவர்களும் செய்த மோசடி குற்றங்கள்.அனைத்தையும் மறைக்கும் வேலைக்காக சமூகத்தை அடகு வைத்து புளப்பு நடத்துவதை நிறுத்தினால் இந்த சமூகம் தலை நிமிர்ந்து வாழ முடியும்,அதற்கான ஒரே வழி ஹகீமும்,றிசாத்தும் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்,ஊழல் இல்லாத புதியவர்களை களத்தில் இறக்க வேண்டும்,அதுவரையும் இந்த அரசியல் மோசடி நடந்து கொண்டே இருக்கும்,தமிழ் மக்கள் 30.40 வருடமாக எந்த அமைச்சர் பதவியும் இல்லாமல் அந்த சமூகத்தை வழி நடத்தவில்லையா? இன்று தமிழரின் பக்கம் உலகமே உதவிக்கரம் நீட்டிக்கொண்டு இருக்கிறது.ஒன்றை அடைவதற்கு ஒன்றை இழக்க வேண்டும் ,அரசாங்கத்தைவிட்டு ஒரு 5வருடம் வெளியில் இருந்தால் எல்லாம் தானாகவே நடக்கும்,இவர்கள் செய்திருக்கும் மோசடி முகத்தை எடுத்துக் கொண்டு தைரியமாக பேச முடியவில்லை பேசினால் FCID விசாரணை பாயும் ஆகவேதான் இவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.வேறு வழியில்லை

You muslims have poorvikam ??? Lol

"நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;........"
(அல்குர்ஆன் : 2:208)

நமது அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை அல்லாஹ் இதில்தான் வைத்துள்ளான்.

Bro Mustafa! It's not about eliminating these two mps Rishad and Hakeem. It's about we Muslims changing ourselves.
In Future whoever comes to power will be against Muslims.
Zionists has already started to get a grip on our country. They will make sure the people who sit in power never favor the Muslims.
Do not trust any politician. They cannot do anything.
We Muslims needs to unite the stupid Jamaths and its blind members needs to understand that for the enemy of Islam we are All " Thambiyas" they can't differentiate us.
Wake up! stop increasing members of your Jamaths , stop hating one another for silly reasons, ignore the Jamaths leaders.
Jamaths may do good deeds but divisions amongst Muslims will bring destruction to us as Allah stated in the Quran.

adey mahendran nanga eppaume muslims tanda nee hindu wandu paru .neenga elam kettu sandapidichingale appa jaffna ungada poorvihama da loosa

அழிவும் முடிவும் இல்லாத நமது அசல் பூர்வீகமான சொர்க்கத்தை மறந்து, அதற்காக உரிய முறையில் முயற்சி செய்யாது, முழுமையாக ஒரு நாள் அழிந்துவிடக்கூடிய அல்லது அதனை இன்றோ நாளையோ நாம் விட்டுவிட்டு செல்லக்கூடிய - இந்த உலகத்தைத் தமது பூர்வீகமாக எண்ணிக்கொண்ட முஸ்லிம்களைப் பார்த்து மகேந்திரனுக்கு சிரிப்பு வந்திருக்கலாம்.

இறக்காமமும் அலுக்காமமுமல்ல இந்த நாட்டையே ஏன் இந்த உலகையே ஆழத்தேவையான தகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ள இறை அருட்கொடையான அல்குர்ஆனை அதன் கருத்தறிந்து ஒவ்வொரு மனிதரும் நடக்க முயற்சிப்போமாக.

Mr.Mahendran.Jaffna we poorveekam nu ketu kadaisiyila adi waangi kattikondazu ninaivirukko?????lol,we,muslims never ask land,they protect inly their personal own lands from sinhala terrorists

Post a Comment