Header Ads



ஒரு தாயின் துஆ அங்கீகரிக்கப்பட்டது (இலங்கையில் ஒரு உண்மைச் சம்பவம்)

-Ulm Fairoos-

சிலருக்கு வாழ்க்கையில் ஏழ்மை தோன்றி மறையலாம். சிலருக்கு ஏழ்மை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் அமையலாம். ஆனால் எங்களுடைய சிறுவயது முதலே ஏழ்மை எங்களுடைய சொத்தாகிப் போனது. இரண்டாம் தரம் படிக்கும் போதே எங்களுடைய அன்புத் தந்தை இறையடி சேர்ந்து விட்டார்கள்.

மாவு இடித்து, பேக் ஒட்டி, இன்னும் பல கைத்தொழில் செய்து மேலதிக சிற்றூண்டிக்கு வசதி இல்லாத போதும், மூன்று வேலை உணவு எங்களுக்கு தாயின் உழைப்பின் காரணமாகவே கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்..!

ஏனைய குழந்தைகள் போல எங்களுக்கும் ஆசை இருந்தும் அவற்றை அடைய வசதி இல்லை என்பதை, உணர்வதற்குறிய வயதை அப்போது நாங்கள் எட்டியிருக்கவில்லை.

எங்களுடைய தாயின் தஹஜ்ஜுத் இதர நேர தொழுகை அனைத்திலும், எங்களுக்காக மீக நீண்ட நேரம் உருக்கமாக துஆ செய்வவார்கள்.

எங்களுடைய தாயின் ஆசை, நாங்கள் மூன்று பேரும் சிறந்த ஆலிமாக, ஹாபிலாக வேண்டும் என்பதே. வறுமைக் கோட்டில் வாழ்ந்தும் எங்களுடைய உழைப்பை கடுகளவும் எதிர்பார்க்காத எங்கள் அன்புத்தாய், எங்களுடைய படிப்பிலும் ஓதுதலிலுமே எங்களை உட்சாகப்படுத்தி அதற்குறிய முயற்சிகளையும் செய்து கொண்டே இருந்தார்கள் அதன் பிரதிபலனை அல்லாஹ் எங்களுடைய அன்புத்தாய்க்கு கண்முண்பே காட்டிவிட்டான்.

மூத்த சகோதரி A/L சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று, ஹைரியா மகளிர் அரபுக் கல்லூரியில் ஆலிமா படிப்பை பூர்த்தி செய்தார்.

எனது சகோதரர் Ulm Faris அவர்கள், அல்குர்ஆன் மனனம் செய்து, எமன் நாட்டில் ஷரீஆத் துரையில் பட்டப்படிப்பை முடித்து மலேசியாவின் மதீனா சர்வதேச பல்கலைக்கழகத்தில் Ma முடித்து, தற்போது அரபி மொழியில் கலாநிதிக்கான (Phd) கற்கை செய்துகொண்டு இருக்கின்றார்கள். மேலும் மாலைதீவில் விரிவுரையாளராகவும் கடமையாற்றுகின்றார்.

அல்லாஹ் பூரண வெற்றியை கொடுப்பானாக....

என்னைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. இதுதான் விதி என்று ஏதோ வாழ்கிறேன்..

அதுமட்டுமல்ல வீட்டுக்கு வரும் உறவுகளிடம், அதிகமாக அல்லாஹ்வை பற்றியும், தொழுகையை பற்றியும் மரணத்தை பற்றியும் அதிகம் பேசுவார்கள்..

யா அல்லாஹ் எனது தாயின் பாவங்களை மன்னித்து, கலிமாவுடன் மரணிக்கக்கூடிய பாக்கியத்தை நசீபாக்கி தேகாரோக்கியத்தையும் வழங்குவாயாக...

ஆமீன்..

9 comments:

  1. If all Muslims will follow this EXAMPLE, there will be success in our lives, Insha Allah. There are many a Muslims who have entrusted their life to God AllMighty Allah's will. Like the prayer of Prophet Moses, "Oh God AllMighty Allah, please bless us what is best you think for me", we should raise our hands in "dua" to God AllMighty Allah. The above is a very good example to all god fearing Muslims, Insha Allah. Let the "dua" of the writer also be blessed, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
    Replies
    1. ஜப்னா முஸ்லிம் அவர்களே, யார் இந்த Noor Nizam? மற்றும் இந்த The Muslim Voice என்பது என்ன? இவர் இங்கே கொமண்ட் பண்ணுவது போன்று நடித்து தனக்கு ஏதாவது விளம்பரம் தேடுகின்றாரா? கவனம் செலுத்தவும்.

      Delete
    2. இங்லிஸில கொமன்ற் எழுதுற சைக்கோ மிச்சம் பேரு இருக்கானுகள்.

      Delete
    3. Masha Allah.

      Noor Nizam must introduce himself with his photo and contact details if he really serve for muslims as a muslim.

      Otherwise, Jaffna Muslim readers we know that he is trying to bring Mahinda regime to power again in a muslim name.

      Delete
  2. Umathu thaipola intha ulahattil letchopa letcham thaimaargal vaalhinraargal sahothara....
    Ellorayum Allah porunthikollattum...

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்.

    உங்களை பற்றியும் சொல்லி இருக்கலாம். சந்தோஷம்

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.