Header Ads



"ஞானசாரர் துள்ளித் திரிகிற போதும், நாய்க் கூண்டில் அடைக்கப்படவில்லை"


 அளுத்கமை கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதோடு நின்று விடாமல் அதை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடமும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடமும் பா.உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இதை தெரிவித்துள்ளார்.

எமது ஆட்சிக் காலத்தில் அளுத்கமை கலவரத்தின் போது சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் மிக குறுகிய காலத்தினுள் புனரமைப்பு செய்து கொடுக்கப்பட்டது.

கலவரத்தின் போதான இழப்பீடுகளை உடனே மதிப்பீடு செய்த போதும் அந்த வருடமே எமது ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் அவற்றை எம்மால் வழங்க முடியாமல் போனது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த கலவரத்தின் சூத்திரதாரிகள் அனைவரும் இந்த அரசுடனேயே ஒட்டி குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் நாம் அவர்களிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது.

மேலும், அமைச்சர் றிஷாத் பதியுதீன் உட்பட பலர் ஞானசார தேரரை கைது செய்ய கோரிய போது, அவரை கைது செய்தால் இந்த ஆட்சியை விட்டு நாம் விலகுவோம் என அமைச்சர் சம்பிக்க கூறியிருந்தார்.

ஆனால் இன்று அவர் இந்த ஆட்சியின் பக்கமே உள்ளார். இது தொடர்பில் கேள்விகள் எழுப்புவதை கடமையாக கருதுகிறோம் எனவும் நாமல் குறிப்பிட்டிருந்தார்.

ஞானசார தேரரை நாய்க் கூண்டில் அடைப்போம் என கூறிக் கொண்டு ஆட்சியமைத்த அரசு. ஞானசார தேரர் அன்று போல் இன்றும் துள்ளித் திரிகின்ற போதும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

நாய்க் கூடு செய்யாமையினால் அவர் கைது செய்யப்படவில்லை என்றால் நாம் அதனை செய்து தருகிறோம் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Chandrika has already ordered the "DOG CAGE" but it was cancelled by My3.

    ReplyDelete
  2. This so-called good governance is good-for-nothing at all.

    ReplyDelete
  3. Repeat your statement inside the Parliament until it's done, if you really sympathy on the victims.

    ReplyDelete
  4. நியாயமான கருத்து... மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்... அதற்காக நீங்கள் புனிதமானவர்கள் இல்லை..

    ReplyDelete

Powered by Blogger.