Header Ads



மரண தண்­டனை குற்­ற­வா­ளி­ துமிந்த, நீதிமன்றம் வந்த காட்சி..!


நாடா­ளு­மன்ற உறு­பி­ன­ரா­க­வி­ருந்த போது மூன்று வரு­டங்­க­ளுக்­கான சொத்­துகள், பொறுப்­புகள் விப­ரத்தை வெளி­யி­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டுக்குள்ளான  முன் னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பாரத லக்­க்ஷமன் கொலை விவ­கா­ரத்தில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட குற்­ற­வா­ளி­யு­மான ஆர்.துமிந்த சில்வா  ஒப்புக் கொண்­ட­தை­ய­டுத்து அவ­ருக்கு 3,000 ரூபா அப­ராதம் விதித்து கொழும்பு நீதிவான் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

2011, 2012, 2013 ஆம் ஆண்­டு­களில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த காலப்­ப­கு­தியில் ஆர். துமிந்த சில்வா தனது சொத்­துக்கள் குறித்த வெளிப்­ப­டுத்­த­வில்லை என கூறி இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அவ­ருக்கு எதி­ராக  இலஞ்ச ஊழல் சட்­டத்தின் கீழ் மூன்று வழக்­கு­களை தாக்கல் செய்­தது.

இது  தொடர்­பான வழக்கு நேற்று  மீள விசா­ர­ணைக்கு வந்த போது, துமிந்த சில்வா அம்­பி­யூலன்ஸ் வண்டி ஊடாக நேற்று கொழும்பு நீதிவான் நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்டார். இத­னை­ய­டுத்து சக்­கர நாற்­கா­லி­யி­லேயே நீதி­மன்­றினுள் அழைத்து செல்­லப்ப்ட்டார். 

இந்­நி­லையில் வழக்கு விசா­ர­ணை­களின் போது  துமிந்த சில்வா சார்பில் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த ஜன­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா, மேல­திக நீதிவான் அருணி ஆட்­டி­க­ல­விடம், தனது சேவை பெறுநர் சொத்து விப­ரங்­களை வெளிப்­ப­டுத்­தா­மையை ஏற்றுக் கொண்­ட­துடன் அவ­ருக்கு ஏற்­பட்ட உடல் ஆரோக்­கி­ய­மற்ற நிலை­மையே அதற்­கான காரணம் என சுட்­டிக்­காட்­டினார்.

தமது தரப்பில் தவறு இடம்­பெற்­றுள்­ளதை ஒப்­புக்­கொண்ட அவர் வேண்­டு­மென்றே சொத்­துக்­களை வெளிப்­ப­டுத்­தாமல் இருக்­க­வில்லை எனவும் இக்­கா­லப்­ப­கு­தியில் வரு­மான வரி திணைக்­க­ளத்­துக்கு அனைத்து விப­ரங்­க­ளையும் சமர்ப்­பித்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து விட­யத்தை ஆராய்ந்த மேல­திக நீதிவான் அருணி ஆட்­டி­கல,  சட்ட விரோ­த­மாக சொத்து சேர்த்­தமை தொடர்பில் இவ்­வ­ழக்கில் எவ்­வித விசா­ர­ணையும்  செய்­யப்­ப­டாத நிலையில் வெளிப்­ப­டுத்­தா­மையை மட்டும் கருத்தில் கொண்டு தண்­டனை அறி­விப்­ப­தாக கூரினார்.

அத்துடன் சட்ட விரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் விசாரணை செய்யப்படுமானால் அதனை தனியான வழக்காக பதிவு செய்யவும் நீதிவான் ஆலோசனை வழங்கிஒயே தண்டனையை அறிவித்தார்.

(எம்.எப்.எம்.பஸீர்)  

No comments

Powered by Blogger.