Header Ads



சிங்கக் கூட்டத்திடம், பிடிபட்ட மான் - ரிஷாட்

வவுனியா சூடுவந்த பிளவு மீனா நகர் கிராமத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் இஸ்தாபிக்கப்பட்ட மஸ்ஜிதுன் ஹைர் பள்ளிவாசல் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது 

பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் " 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ அன்புச்சகோதரர்களே  சூடு வந்த பிளவு கிராமமானது மீள்குடியேறிய  ஒரு கிராமம் என்பது நமக்கு தெரியும்.  இந்த நேரத்தில் சில விடயங்களை கூற விரும்புகிறேன் அதாவது இன்று சிறுபாண்மை மக்களுக்கு இருக்கும்  பிரச்சனைகளை பார்க்கும் பொழுது கல்வியில் நாங்கள்  பின்தங்கிய நிலையில்  இருக்கின்றோம். அதுமட்டுமல்லாமல் எமது  சமூகத்தின் ஒற்றுமையை பார்க்கப்போனால்  அதுவும் போதாமையாகவே இருக்கின்றது நீங்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் சகோதரர்களே எமது மார்க்கம் எமக்கெல்லாம் சொல்லித்தருவது ஒற்றுமையான ஒரு வாழ்க்கையை நாம் வாழவேண்டும் அவ்வாறு ஒற்றுமையில்லாத சமூகம் சிங்கக் கூட்டத்திடம் பிடிபட்ட மான் போன்றாகும் அதுமட்டுமல்ல எமது மார்க்கம் கல்வியையும் எமக்கு வலியுறுத்துகிறது ஒவ்வொரு முஸ்லீம்களுக்கும் தெரியும் குரான் இறக்கப்பட்ட முதல் ஆயத்தே இக்குரஹு " ஓதுவீராக " என்ற வசனம்தான் அவ்வாறு கல்வியை அடிப்படையாக கொண்ட சமூகம் இன்று கல்வியில் எந்தளவில் இருக்கின்றோம் என நீங்கள் சிந்திக்க வேண்டும்  

நான் எனது சொந்த இடத்தை விட்டு 90ம் ஆண்டுக் காலப்பகுதியில் அகதியாக சோப்பின் பேக்குகளுடன் கண்ணீர் வடித்த கண்களுடன் வெளியேறினேன் ஆனால் நான் கல்வியை கைவிடவில்லை தெருவிளக்கில் இருந்து கற்றேன் பின்னர் அகதியாக வெளியேற்றப்பட்ட நான் மீள்குடியேற்ற அமைச்சராக இந்த மண்ணில் காலடி வைத்தேன் அப்போது நான் இனம் பார்க்கவில்லை மதம் பார்க்கவில்லை மொழி பார்க்கவில்லை சிறுபான்மை சமூகம் என்பதை மட்டுமே பார்த்தேன் அந்த நேரத்தில் 300,000 தமிழ் மக்கள் மெனிக் பாம்களில் இருந்தார்கள் அவர்களுக்கான அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்தேன் அவர்களை மீள்குடியேற்றினேன் இதை ஏன் சொல்கிறேன் என்றால் முஸ்லீம் தமிழ் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்றோம் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றோம் ஆனால் சில அரசியல்வாதிகள் அரசியல் வன்முறைகளை தூண்டுவதாக, அல்லது இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள் வீண் அரசியல் இலாபங்களுக்காக பொது மக்களை தூண்டி விடுகின்றார்கள் ஆனால் அதற்காக நாங்கள் சோர்ந்து போக மாட்டோம் இந்த வாழ்க்கை நிரந்தரம் இல்லை நாங்கள் அனைவரும் மரணத்தை சுவைக்க வேண்டியவர்கள் என்பதை மனதில் கொண்டு செயட்படுபவர்கள் .  இறைவன் அமானிதமாக எனக்கு தந்த இந்த பதவியை முழுமையாக கஷ்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் உதவி செய்வதற்காக மட்டுமே தவிர பசியில் கிடக்கும் மக்களிடம் இனம் ,மதம்,மொழி ,போன்றவையை காட்டி வேலை செய்பவர்கள் அல்ல இஸ்லாம் மார்க்கமும் அதை எமக்கு சொல்லித்தரவில்லை.

 எனவே அன்பான சகோதரர்களே நாங்கள் அனைவரும் மற்றவர்கள் மீது இரக்கம் காட்டக்கூடியவர்களாக இருக்க வேண்டும் அண்மையில் கிழக்கு மாகாணத்தில் டெங்கு காய்ச்சலினால் 16 சகோதரர்கள் உயிரிழந்துள்ளார் பின்னர் கந்தூரி நிகழ்வில் உணவு விஷமானதால் 3 சகோதரர்கள் உயிரிழந்துள்ளார் இதைநான் ஏன் சொல்கிறேன் என்றால் நாம் இருக்கும் நேரம் நிரந்தரம் இல்லை நிரந்தரமற்ற இந்த வாழ்க்கையில் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம் பிறருக்கு உதவி செய்பவராக இருப்போம் மேலும் என்னிடம் உங்கள் கிராமத்தில் உள்ள பிரச்சனைகள் ஆராய்ந்து அவற்றை செய்து தருவோம் என தெரிவித்துக்கொள்கிறேன்" 

5 comments:

  1. மாஷா அல்லாஹ் நல்ல அருமையான முன்மாதிரி. இவருக்கு ஒத்தொழைப்பு வழங்க ஏனைய அரசியல்வாதிகளும் முன்வருவார்களேயானால் நமது சமூகத்தின் பிரச்சனைகளை இலகுவாக்கமுடியும். ஆனால் இவர்கள் எப்பதான் ஒன்றுபடுவார்களோ!

    ReplyDelete
  2. Very good example by Br. Rishad. I hope Mr.SLMC chief also will follow this example and he will d politics for the community.

    ReplyDelete
  3. Rizad doing his utmost . Y hinder him? It's treacherous n suicidal to sabotage him just beacause he marjinalises other veteran old but corrupted ones .He has been a champion of downtrodden waging a battle amidst our fierce resistance by our guys.After all our community gets benifitted. Y getting panicked ? Thanks to his moves others r running around to outsmart him .

    ReplyDelete
  4. ma shaa allah. allah may give him long life and good health. also allah may give hidayath to other muslim members

    ReplyDelete
  5. Rushad Badiudeen is a radical politicia n

    ReplyDelete

Powered by Blogger.