Header Ads



என்னுடன் ஓடக்கூடிய குதிரை வீரனை, முடிந்தல் நியமித்துக் காட்டுங்கள் - ஜனக்க பண்டார சவால்

“என்னுடன் ஓடக்கூடிய குதிரைவீரன் இல்லையா?” என்று வினவிய, பதவி விலக்கப்பட்ட முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜனக்க பண்டார தென்னகோன், தன்னுடன் ஓடக்கூடிய குதிரைவீரனை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராக, முடிந்தால் நியமிக்குமாறும் சவால் விட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து தான் உள்ளிட்ட இன்னும் சிலரை, நீக்கியமை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, தம்புள்ளையில் நடத்தப்பட்டது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  

“அமைப்பாளர் பதவியிலிருந்து என்னை, நீக்கியதையடுத்து அந்த செயற்பாட்டை கண்டித்து, அழைப்புகள் வந்தன. அந்தச் செயற்பாட்டை கண்டிக்கும் வகையிலேயே, மத்திய மாகாண சபையின் அமைச்சரான என்னுடைய மகன் பிரமித் பண்டார தென்னகோன், அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துகொண்டார்.  

கட்சிக்குள் பல குறைபாடுகள், தவறுகள் இருக்கின்றன. என்னுடைய தந்தை, 1956ஆம் ஆண்டு முதல் தம்புள்ளையை பிரதிநிதித்து வப்படுத்தினார். தந்தையின் சேவையை, 1994ஆம் ஆண்டுமுதல் நான் முன்னெடுத்தேன்.  

இதேவேளை, வாக்குவங்கி இல்லாதவர்கள் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டமை தனக்கு வருத்தமளிக்கின்றது என்றும் அவர் கூறினார்.   

No comments

Powered by Blogger.