Header Ads



சிறிலங்கா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இலவச தேயிலைப் பொதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேயிலைப் பொதிகளை அன்பளிப்பாக வழங்கும் திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேயிலைப் பொதியொன்றை வழங்கும் திட்டம் தொடர்பாக சிறிலங்காவின் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசநாயக்க அமைச்சரவைக்குப் பரிந்துரை ஒன்றை செய்திருந்தார்.

இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சுடன் பெருந்தோட்டத்துறை அமைச்சு ஆலோசனை நடத்துமாறு  அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

அதேவேளை, சுற்றுலாப் பயணிகள் நாடு திரும்பும் போது, தேயிலைப் பொதிகளை வழங்கலாம் என்று சில அமைச்சர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இல்லாவிட்டால், தேயிலைப் பொதிகளை சுற்றுலாப் பயணிகள் தமது பயணம் முழுவதும் காவிக் கொண்டு செல்ல வேண்டியேற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் தேயிலையை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

1 comment:

  1. நாட்டு உற்பத்தி வருமானம் என்று சொல்ல இந்த தேயிலை மட்டும்தான் பிறநாட்டுக்கு விக்கப்படுகின்றது இதையும் சும்மா கொடுத்தால் நிலைமை என்ன? இதைவிட தரமான தேயிலையை குறைந்த விலையில் விற்க நடைவடிக்கை எடுக்கவும்.

    ReplyDelete

Powered by Blogger.