Header Ads



அல் குர்ஆன் வசனங்களுடன், உயிர்நீத்த “காரி” (உணர்ச்சிமிகு வீடியோ)


-மக்தூம்-

இந்தோனேசியாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற முக்கிய நிகழ்வு ஒன்ரை அந்நாட்டு ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.

அந்நாட்டு சமூக விவகாரங்களுக்கான அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைக்க இந்தோனேசியாவை சேர்ந்த பிரபல காரி “அஷ் ஷெய்க் ஜஃபர் அப்துர் ரஹ்மான்” கிராஅத் ஓதினார்.

அல் குர் ஆனின் 67 வது அத்தியாயமான சூரா அல் முல்கை ஓதிய அவர்,

“உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்” (67:2)

எனும் வசனத்தை வந்தடைந்த போது அவரால் கிராஅத்தை முழுமையாக் ஓத முடியாத நிலையில் அவர் மயங்கி விழுந்து உயிர் நீத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  


1 comment:

  1. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
    (அல்குர்ஆன் : 2:156)

    ReplyDelete

Powered by Blogger.