Header Ads



கத்தியுடன் களத்தில் இறங்கிய நாமல் ராஜபக்ச

நாடு முழுவதும் டெங்கு நோய் அச்சுறுத்தல் தொடர்ந்து வரும் நிலையில் அரசு கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இது இவ்வாறு இருக்க நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டெங்கு ஒழிப்பு நிமித்தம் சுத்திகரிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

நாமல் பெலிவத்த வைத்தியசாலையின் சுற்றுப்புறச் சூழலை இளைஞர்களுடன் இணைந்து சுத்தம் செய்த காரணத்தினால் சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் அடைந்துள்ளார்.

மேலும் இந்த சுத்திகரிப்பு நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.


“கத்தியுடன் களத்தில் நாமல் ஓர் சமூக சேவகன்”, “முன்னரும் இதே போல் செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாமே”

“வீட்டில் அமர்ந்திருக்கும் போது தான் இப்படியான சேவைகள் நினைவு வரும்” “தந்தையை பின்பற்றும் மகன்” எனவும் பல்வேறு வகையான விமர்சனங்கள் கூறப்படுகின்றன.


எவ்வாறாயினும் நாமலின் இவ்வாறான செயற்பாடுகள் இழந்த செல்வாக்கை மீளவும் பெற்றுக் கொள்ளுவதற்கான செயற்பாடுகளே என ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மற்றொரு பக்கம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு மக்களுடன் இணைந்து சேவை செய்வது வரவேற்கத்தக்கது எனவும் இரு வகை விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

1 comment:

  1. எல்லாம் சரி.. எவ்வளவு நேரம் சிரமதானம் செய்தார்?

    ReplyDelete

Powered by Blogger.