Header Ads



கொழும்பின் குப்பைகள், பிலியந்தலைக்குச் செல்கிறது - நீதிமன்றம் அதிரடி

கொழும்பு நகர சபையால் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலை கரதியான பகுதியில் கொட்டுவதற்கு கொழும்பு மாநகரசபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததை அடுத்து, கொழும்பு மாநகரசபை நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த உத்தரவை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதன்பிரகாரம், கொழும்பில் நாள் ஒன்றுக்கு சேரும் 350 மெட்ரிக் தொன் குப்பைகளை பெற்றுக்கொள்ளுமாறு கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நடைமுறை நேற்று மாலை முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, கொழும்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை குறித்த பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் வீ,கே.ஏ. தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பில் சாதாரணமாக 3 நாட்களுக்கு மேல் குப்பைகள் அகற்றப்படாவிட்டால் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. My comments: 18.03.2017.
    UNP MP, S.M.Marikkar, You are a big liar. You told the media/press that you will resign from the post of MP, if a solution was not provided at the earliest. Now nearly 60 persons are suspected dead (31 already found) under the dump. If you are NOT A DECEPTIVE MUSLIM POLITICIAN, YOU SHOULD RESIGN FROM YOUR MP POST NOW. Let's see whether you will do so? Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. If this happened earlier, could have save lives.

    ReplyDelete

Powered by Blogger.