Header Ads



அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி - புலனாய்வு பிரிவு அறிக்கை

சமகால அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுவதாக புலனாய்வு பிரிவு அறிக்கை ஒன்றின் அடிப்படையில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் தற்போது தலைதூக்கியுள்ள குப்பை பிரச்சினை தொடர்பில் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு, அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஹர்த்தால் வரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பது நோக்கமாகும்.

கடந்த நாட்களில் இந்த அறிக்கை அரசாங்கத்தின் பிரதானிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கைகை்கு அமைய, குப்பை பிரச்சினையை அடிப்படையாக கொண்டு 53 ஹர்தால்களை நாட்டில் நடத்துவதற்கான ஆயத்தங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை நாடு முழுவதும் குப்பை கொட்டிய இடங்களை சுற்றி வளைப்பதற்கும், கொழும்பு உட்பட நகர பிரதேசங்களில் குப்பை கொட்டும் நடவடிக்கையை வலுவிழக்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் ஒரு சில இடங்களில் குப்பை கொட்டுவதனை தடுப்பதற்காகவும் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றுக் கொள்வதன் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்காக முன்னிலை சோஷலிச கட்சி நேரடியாக தலையிடுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் அரசாங்கத்தின் ஆலோசகர்கள் இந்த குப்பை பிரச்சினையை விரைவில் தீர்த்துக் கொள்வதற்கு தவறினால் அது அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதற்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முக்கிய பகுதிகளில் தேர்தல் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சி இழக்க நேரிடும் எனவும், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவ்விடங்களை பிடித்துக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.