Header Ads



'மக்களின் அடிப்படை உரிமைகளை, நசுக்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்'

"யுத்தம் முடிவடைந்து இத்தனை வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் அரசாங்கம் மக்களின் காணிகளைப் பறித்து அவர்களை வீதியில் அலைய விட்டிருப்பது  பரிதாபமானது. சொந்த இடங்களில் குடியேறி வாழுவதற்கான அடிப்படை உரிமைகளை வழங்காத நிலையில் தேசிய நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும்.  வனபாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்ட எல்லைகளுக்குள் மக்கள் விவசாயம் செய்வதனை தடுத்து விட்டு, படையினரே அங்கு விவசாயம் செய்கின்றனர். வன பாதுகாப்பு பிரதேசத்தில் விவசாயம் செய்வது குற்றம் என்றால் படையினருக்கு அந்த உரிமையை வழங்கியது யார்..? படையினரின் கடமை பயிர்ச்செய்கை செய்வதா அல்லது மக்களை பாதுகாப்பதா..?  எனவே, மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குகின்ற நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்தி மக்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்" நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

மன்னார்- முசலி பிரதேச காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக  நல்லாட்சிசக்கான தேசிய முன்னணி விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நேற்று  (06.04.2017) காலை கொழும்பில் நடாத்தியது. சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்ததாவது.
    
 முஸ்லிம்-தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அரச படையினர் கையகப்படுத்தி முகாமிட்டிருக்கிறார்கள் முல்லிக்குளம் எனப்படும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான முழுக்கிராமமுமே கடற்படையினரால் அபகரிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு காணிகளை இழந்த ஏழைத்தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களை தம்மிடம் மீளவும் கையளிக்குமாறு கோரி கடந்த இரண்டு வாரங்களாக பல கஸ்டங்களுக்கு மத்தியில் போராடி வருகிறார்கள். அதேபோலவே சிலாபத்துறைப் பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளையும் கடற்படையினர் கையகப்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் பல இடங்களிலும் இது நடந்திருக்கிறது. 

இதில் ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் தமது சொந்த இடங்களில் மக்கள் குடியேறுவதற்கான அனுமதியினை மறுத்து விட்டு அக்காணிகளில் படையினர் விவசாயம் செய்து வருகிறார்கள். மக்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்புகளின் அறுவடைகளையும் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். வனபாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்ட எல்லைகளுக்குள் மக்கள் விவசாயம் செய்வதனை தடுத்து விட்டு, படையினரே அங்கு விவசாயம் செய்கின்றனர். இதனை நாம் எமது கள விஜயத்தின் போது நேரடியாகக் கண்டோம்.
   
முசலி பிரதேச மக்களின் காணிகளை அபகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும். மக்களின் நியாயங்களையும் உரிமைகளையும் கேட்டறிந்து பிரச்சினைளை நீதியாக தீர்க்கக் கூடிய வகையில் அதிகாரமுள்ள ஒரு ஆணைக்குழுவினை நிறுவி இபிபிரச்சினைக்க சுமூகமான ஒரு முடிவினை காண ஜனாதிபதி உடனடியாக முன்வர வேண்டும்."

3 comments:

  1. Salaams,
    Dear Brother Abdul Rahuma - Leader/President NFGG.
    Please do not misguide the Muslim public, Insha Allah.
    Read below.

    WHY PANIC?
    HERE IS THE TRUTH, Insha Allah - Read below:
    President signs special gazette notification on declaring four forests near Wilpattu North Sanctuary as Conservation forests.
    President signs special gazette notification on declaring four forests near Wilpattu North Sanctuary as Conservation forests
    All the forests located near the Wilpattu North Sanctuary belonging to the Department of Forest Conservation will be declared as one Reserve.
    Accordingly, President Mahripala Sirisena, who is on three days official visit to Russia, signed the special Gazette notification in Moscow, yesterday (24th March) declaring Mavillu, Weppal, Karadikkuli, Marichchikadi and Vilaththikulam forests as Mawillu forest Reserve under the 3A of the Forest Conservation Ordinance.
    If there is any necessity to make variation of limits of conservation forest only the Minister may by Order published in the Gazette, declare that the limits of any conservation forest shall be altered or varied. An Order made by the Minister under subsection (1) will have no effect until it has been approved by the President and confirmed by Parliament and notification of such confirmation is published in the Gazette.
    Consequently the conservation forest will get the maximum legal coverage and the protection in this regard will be ensured.
    Recently, several media organizations made allegations that deforestation is taking place in the Wilpattu National Park as well as in the surrounding forests.
    Although such allegations were made, according to the investigations carried out in this regard revealed that, there was no deforestation taking place, except lands given to the resettlement purposes in 2012/2013.
    During the meeting held on December 30, 2016 under the patronage of President Maithripala Sirisena on this issue, the President has given instructions to issue a Gazette notification to declare forests near the released land area as conservation forest to ensure the protection of these forests.
    PLEASE READ THE LAST TWO LINES CAREFULLY - FORESTS NEAR THE RELEASED LAND AREAS AS CONSERVATION FOREST TO ENSURE THE PROTECTION OF THESE FORESTS.
    MAHINDA RAJAPAKSA AND BASIL RAJAPAKSA HAD ALREADY RELEASED THE LANDS UNDER THE LAW WHERE THE SETTLEMENTS ARE TAKING PLACE, ALHAMDULILLAH.
    SO WHY ARE THESE POLITICIANS GETTING INTO PANIC?
    Noor Nizam - Convener - "The Muslim Voice".
    http://slcgdxb.com/president-signs-special-gazette-notification-on-declaring-four-forests-near-wilpattu-north-sanctuary-as-conservation-forests/

    ReplyDelete
  2. What's is your point Mr. Nizam? You state that there is no deforestation (by Muslims). Then do you want to say that those lands given for re-settlement purposes are not included into the conservation forest range, gazetted? Then why don't you go and explain the public who are on an agitating campaign against the gazette notification?

    ReplyDelete
  3. My point is - (Reference) "During the meeting held on December 30, 2016 under the patronage of President Maithripala Sirisena on this issue, the President has given instructions to issue a Gazette notification to declare forests near the released land area as conservation forest to ensure the protection of these forests".You get more clarity" if you will watch the: “Athirvu” exclusive interview with Hunais Farook, YLS Hameed and Rushdhie Habeeb (02-04-2017) | Vasantham TV | The Official Website of Vasantham TV".
    RISHAD BATHIUDEEN IS HOODWINKING THE MUSALI AND MANNAR PEOPLE WHOLESALE FOR HIS PERSONAL GAINS. These are DECEPTIVE POLITICIANS.
    It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. IT IS ONLY THIS NEW POLITICAL FORCE that can fight/tame this "Yahapalana government", STOP THESE DECEPTIVE HILMY AHAMED and A.M.AMEEN FROM GATHERING THE MUSLIM VOTERS TO THE UNP SIDE/CAMP OF THE "YAHAPALANA GOVERNMENT" AND WIN THE FUNDAMENTAL RIGHTS OF THE MUSLIMS OF SRI LANKA AT LARGE, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.