Header Ads



கேலியாக கூறியதை பெரிதுபடுத்திவிட்டார்கள் - பல்டி அடித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் வெறுமனே கூறிய கதை பெரிதுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -28- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

பணிப்புறக்கணிப்புகள் அதிகரித்துள்ளமை குறித்து கலந்துரையாடப்பட்ட போது உங்களால் இதனை கட்டுப்படுத்த முடியாதா என ஜனாதிபதி அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் கேலியாக கேட்டுள்ளார்.

போராட்டங்களை அடக்க பாதுகாப்பு துறையில் தனியான பதவியை ஏற்படுத்த ஜனாதிபதி கனவிலும் எண்ணவில்லை.

அமைச்சரவைக் கூட்டத்திற்கு நான் சென்றிருக்கவில்லை. ஊடகங்களில் இது பற்றி அறிந்து கொண்டதும் நான் ஜனாதிபதியை சந்தித்தேன்.

கேலியாக தான் அதனை கூறியதாகவும் அப்படியான ஒன்றை செய்ய எந்த வகையிலும் தான் எண்ணியிருக்கவில்லை என ஜனாதிபதி கூறினார்.

இதனை அரசியல் பிரச்சினையாக மாற்றி சில கட்சிகள் தமது மே தினக் கூட்டத்திற்கு பயன்படுத்த முயற்சித்து வருகின்றன. இந்த கதையை கூறி மக்களை அச்சுறுத்தி காலிமுகத் திடலுக்கு மக்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.

அதேவேளை அமைச்சரவையின் பேச்சாளர் கூறும் விடயங்களை பொறுப்புடன் கூறவேண்டும். அவர் கூறும் விடயங்களை மாறாது.

அமைச்சர் ராஜித இதனை கூறியிருந்தால், அது குறித்து அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அரசாங்கத்தின் அதிகார பீடத்தில் இருப்பவர்களும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Yahapalanaya is always a Joke. Jokers are ruling the country.

    ReplyDelete

Powered by Blogger.