April 27, 2017

நபிகளாரின் போதனைகளை பின்பற்றியும், அல்குர்ஆன் வழியிலும முஸ்லீம்கள் வாழ்கின்றனர்

(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கை இஸ்லாமிய நிலையமும் சவுதி அரேபியா  இஸ்லாமிய விவகார அமைச்சின் தஹ்வா அமைப்பும் இணைந்து ஆசிய நாடுகளின் 40 நாடுகள் பங்கு கொள்ளும் சர்வதேச மாநாடு இன்று கொழும்பு அலறி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இம் மாநாடு இஸ்லாமிய யதாத்தமும், அதற்கான சவால்களும் என்ற தலைப்பில் நடாத்தப்படுகின்றது. ஆரம்ப வைபவத்தில் இஸ்லாமிய தலைவா் ஹூசைன் முஹம்மத், இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, முஸ்லீம் சமய தபால் அமைச்சா் எம்.எச். ஏ ஹலீம், இந்தியாவின் ஜம்மியத்துல் உலமா தலைவா் அர்சத் மதனி சவுதி அரேபியாவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய இஸ்லாமிய விவகார ஆலோசகருமான காலாநிதி அப்துல் அசீஸ் அல்-அமநாா்  சபாநாயகா் கருஜயசுரிய, ஜனாதிபதியும் இங்கு உரையாற்றினாா்கள்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா

இஸ்லாமிய நாட்டுப் பிரநிதிகள் இலங்கையில் இம்மாநாட்டினை நடாத்துவதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும், அரபு பிரநிதிகளை நான் மனவுவா்ந்து வரவேற்பதாகவும் தெரிவித்தாா். நபி நாயகம் முஹம்மத் (ஸல்) அவா்களின் போதனைகளை பின்பற்றியும் அல் குர்ஆண் வழியில் தமது போதனைகளையும் நல்ல சிந்தனைகள் அடிப்படையில் உலகில் வாழும் முஸ்லீம்கள் வாழ்கின்றனா்.  உலகில் மனிதா்கள் குண்டுகளால் கொலைசெய்யப்படுகின்றனா். நாம் குண்டை பயண்படுத்தியவனை குறை கூறாமல் அதனை உற்பத்தி செய்து அதனை விற்பவனுக்கே நாம் எதிா்க்கின்றோம்.  இலங்கையில் உள்ள மதங்களான இஸ்லாம் - குர் ஆண்,  கிரிஸ்த்துவம் -பைபில், ஹிந்து -பகவத் கீத, பௌத்தம் - திரவிட்டே போன்ற ஆத்மீக ரீதியில் மனிதா்களை ஒன்றுபடுத்துகின்றனா்.  அரசிலய் கட்சிகள் அரசியல்வாதிகளது ஆலோசனைகளை விட நாம் ஆத்மீகவாதிகளின் ஆலோசனையை கேட்டே செய்படுபவன்.

இந்த நாட்டில் சுதந்திரம் கிடைத்தவுடன் அதற்காக சகல இனத்தவா்களும் இணைந்து பிரிட்டிசாரிடமிருந்து சுதந்திரத்தினைப் பெற்றோம்.  இந்த நாட்டில் வாழும் முஸ்லீம் ஹிந்து பௌத்தம் கிரிஸ்த்துவ மக்கள் சகலரும் ஜக்கியமகாவும் சமாதானமாகவும் வாழ்ந்து வருகின்றனா். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு தெரிவித்தாா்.

4 கருத்துரைகள்:

மத அடிப்படையில் ஆட்சி நடத்தும் நீங்கள் எல்லா மத அனுஸ்டானங்களையும் மதிக்க வேண்டும் அப்படியே இல்லாமல் பௌதர்களின் கதையை கேட்டுக் கொண்டு செய்தால் அடுத்த மதத்தவர்கள் பாதிப்படைகின்றார்கள்.பௌத்த மத குருக்களின் நல்லவர்களின் ஆலோசனையை கேட்டாலும் அதில் நியாயம் இருக்கும் ஆனால் நீங்களோ மதகுரு வேடம் போட்ட பௌத்த பயங்கரவாதி ஞானசேரவின் பயங்கரவாத அமைப்பின் ஆலோசனைக்கு அடிபணிவதால் நாடு உருப்படுமா?

First and foremost revoke the Gazette regarding Wilpattu and ease the conscience of downtrodden people in Musali.

First and foremost revoke the Gazette regarding Wilpattu and ease the conscience of downtrodden people in Musali.

இனத்துவேசிகளால் இலங்கை முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் பல்நாட்டு முஸ்லிம் தலைவர்கள் சாட்சியாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கான அருமையான சந்தர்ப்பம். பயன்படுத்துவார்களா?

Post a Comment