Header Ads



அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால்..? ரவி கருணநாயாக்க எச்சரிக்கை

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் எச்சரிக்கை காரணமாக அமைச்சரவை மாற்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்தின் போது தம்மை நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால், இந்த அரசாங்கத்தின் இரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக ரவி கருணாநாயக்க பிரதமரை எச்சரித்துள்ளார் எனவும் அமைச்சுப் பதவியை துறந்து சாதாரண ஓர் பாராளுமன்ற உறுப்பினராக பின்வரிசையில் அமர்ந்து கொள்வதாகவும் ரவி கருணநாயாக்க எச்சரிக்கை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளதனைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி திட்டவட்டமாக பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. Is Yahapalanya ship sinking?

    ReplyDelete
  2. அப்படி என்றால் இந்த அரசாங்கத்திற்கும் பல ஊழல்கள் நிறைந்து இருக்கிறது என்பது புலனாகிறது,யாருடைய கையும் சுத்தம் இல்லை என்பதுதான் உண்மை

    ReplyDelete
  3. Bro முஸ்தபா இந்த அரசாங்கத்திலும் அதே பழைய குட்டையில் ஊரிய மட்டைகள்தான் இருக்கின்றார்கள். அவர்கள் சுயநலத்திறலகாக கட்சிமாறினார்களே தவிர நாட்டை சூரையாடும் கொள்கையிலிருந்து மாறவில்லை.
    முடிந்தால் யாராவது ஒரு அரசியல்வாதிக்காவது வருடாவருடம் தனது சொத்துமதிப்பை கூறச்சொல்லுங்கள் பார்ப்போம்.
    நாட்டுக்காக/ சமூகத்துக்காக என்று எந்த அரசியல்வாதியும் இல்லை.
    அனைவரும் பணம், பதிவி ஆசை பிடித்த சுயநலவாதிகள்.
    முஸ்லிம்களாகிய நாம் இவர்களை நம்பவேண்டிய அவசியமே இல்லை. நம்பி பிரயோசனமுமில்லை.
    நோன்பும் வேறு வருகின்றது.. இனி இயக்கவாதிகளும் அதன் சுயநலம்பிடித்த தலைவர்களும் வேறு பலபிரச்சினைகள் கொண்டுவருவார்கள்.
    இலங்கை அடுத்த மியன்மார் ஆகும் நிலைமை வெகு தொலைவில் இல்லை.

    ReplyDelete
  4. இந்த சின்ன நாட்டை ஆட்சி செய்ய பாடுறபாடு!!

    ReplyDelete

Powered by Blogger.