Header Ads



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, பேராசிரியர் விக்னேஸ்வரன் நியமனம்

-பாறுக் ஷிஹான்-

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று(28) காலை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று தொழில்நுட்ப பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா முன்னணியில் இருந்தார்.

வாக்குப் பதிவின் நிறைவில் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா போராசிரியர் கே.விக்னேஸ்வரன் ஆகியோர் முறையே முதலாம் இரண்டாம் இடங்களில் நிற்க மூன்றாவது இடத்துக்கான தெரிவு சமநிலையில் இருந்ததனால் மறு வாக்குப் பதிவின் மூலம் பேராசிரியர் ரீ.வேல்நம்பி மூன்றாவது இடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

எனினும் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா போராசிரியர் கே.விக்னேஸ்வரன் பேராசிரியர் ரீ.வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் யாழ். பல்கலைக்கழக பேரவையினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதி தற்போதைய விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரனை தெரிவு செய்தள்ளார்.

மேலும் கடந்த சில தின்களிற்கு முன்னர் தொழில்நுட்ப பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா துணைவேந்தராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வதந்திச் செய்திகளை பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தன

No comments

Powered by Blogger.