Header Ads



இலங்கையின் பங்குச் சந்தையில் புலிகள், மிகச்சிறந்த முதலீட்டாளர்கள் என்கிறார் எரிக் சொல்ஹெய்ம்

புலிகள் இலங்கையின் பங்குச் சந்தையில் தற்போது ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று -25- இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர்,

எரிக் சொல்ஹெய்ம் அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றிக்கு கருத்து ஒன்றினை தெரிவித்திருந்தார். அதாவது இலங்கைக்கான மிகச்சிறந்த முதலீட்டாளர்கள் சீன நிறுவனத்தார் அல்ல. புலம் பெயர்ந்த விடுதலைப் புலிகளே. அவர்களிடம் பாரிய அளவு பணம் இருக்கின்றது.

அதேபோன்று அவர்களிடம் நவீன தொழில்நுட்பம் இருக்கின்றது, அவர்கள் மூலமாக இலங்கையில் முதலீடுகள் செய்து அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்திருந்தார். அவர் பகிரங்கமாகவே இதனைத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை விடுதலைப்புலிகளின் பணம் மத்திய வங்கிக்கு செல்லாமல் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு பங்குச் சந்தையில் முதலீடுகள் செய்யப்பட்டும். தற்போதும் இது நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இதற்கு ஆதாரமாக கடந்த காலங்களில் தொடர்ந்து இலங்கை பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து கொண்டு வந்தது ஆனால் கடந்த ஏப்பிரல் மாதத்திற்கு பின்னர் சட்டென்று பங்குச்சந்தை வளர்ச்சியடைந்து விட்டது.

கூடிய விரைவில் பரிமாற்ற கட்டுப்பாட்டு தாராளமயமாக்கல் சட்டமூலத்தை அமுல்படுத்தப்படப்போவதாக கூறியதன் பின்னரே இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறத் தொடங்கியது.

சின்னஞ் சிறு பிரச்சினைகள் தொடர்பில் போராட்டங்கள் செய்யப்படுகின்றது ஆனால், நாட்டுக்கு ஏற்படும் மிகப்பெரும் அழிவுகள் பற்றி கூட்டுஎதிர்க்கட்சியைத் தவிற வேறு எவரும் பேசுவதில்லை எனவும் பந்துல தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.