Header Ads



அரசாங்கம் தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறது - கடுமையாக சாடுகிறார் கார்தினால்

அரசாங்கம் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கின்றது என கார்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

பொதுமக்களை அச்சுறுத்தி அவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து குப்பை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பது அரசாங்கம் தற்கொலை செய்து கொள்வதற்கு நிகரானது.

ஜாஎல, ஏகல பகுதியில் குப்பைகளை கொட்ட முயற்சிக்கின்றனர். அதற்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டோம்.

மீளவும் இந்த குப்பை பிரச்சினை உருவாகியுள்ளது. முத்துராஜவலவில் குப்பைகளை கொட்டுவதனால் நீர் மாசடைகின்றது. சுற்றாடல் மாசடைகின்றது.

அரசாங்கம் என்ற ரீதியில் சில நியாயமான பிரச்சினைகள் இருக்கக் கூடும். எனினும் குப்பை பிரச்சினைக்கு ஒவ்வொரு நபர்களின் தனிப்பட்ட யோசனைக்கு அமைய தீர்வு காண முடியாது.

அரசாங்கம் மீது நம்பிக்கை கொண்டே இந்த அரசாங்கத்தை மக்கள் ஆட்சி பீடம் ஏற்றியிருந்தனர். சட்டங்களை அமுல்படுத்தி மக்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பது ஆரோக்கியமானதல்ல. அது அரசாங்கம் தற்கொலை செய்த கொள்வதற்கு நிகரானது.

மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். ஜாஎல மற்றும் அதனை அண்டிய பகுதி குப்பை பிரச்சினை குறித்து மட்டும் நான் பேசவில்லை ஏனைய பகுதிகள் தொடர்பிலும் நான் குரல் கொடுக்கின்றேன் என கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.