Header Ads



ஐ.தே.க‌வின் மே தின‌த்தை, முஸ்லிம்க‌ள் புற‌க்க‌ணிக்க‌ வேண்டும்...!

பௌத்த‌ர்க‌ள் வாழாத‌ இற‌க்காம‌த்தில் புத்த‌ர் சிலையை வைத்த‌ த‌யா கம‌கே ம‌ற்றும் அத‌ற்கு துணை போன‌ ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சி ம‌ற்றும் முஸ்லிம் காங்கிர‌சைக் க‌ண்டிக்குமுக‌மாக முஸ்லிம்க‌ள் ஐ தே க‌வின் மேதின‌ கூ‌ட்ட‌த்துக்கு செல்வ‌தை ப‌கிஷ்க‌ரிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி தெரிவித்துள்ள‌தாவ‌து  

கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ளின் விகிதாசார‌த்தை குறைப்ப‌த‌ற்காக‌ ஐக்கிய‌ தேசிய‌க்க‌ட்சி 1960 க‌ளிலிருந்தே முய‌ற்சி எடுக்கிற‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ முஸ்லிம்க‌ளை மிக‌ப்பெரும்பான்மை மாவ‌ட்ட‌மாக‌ இருந்த‌ அம்பாரை மாவ‌ட்ட‌த்துட‌ன் ப‌ல‌ சிங்க‌ள‌ பிர‌தேச‌ங்க‌ள் இணைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அதே போல் அம்பாறையில் இருந்த‌ முஸ்லிம்க‌ள் ஐ தே க‌வால் விர‌ட்டி அடிக்க‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ளின் காணிக‌ள் ப‌றிமுத‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌.

இவ‌ற்றின் தொட‌ராக‌வே மாணிக்க‌ம‌டுவில் ஐ தே க‌ ம‌ற்றும் முஸ்லிம் காங்கிர‌ஸ் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளின் ஆத‌‌ர‌வுட‌ன் புத்த‌ர் சிலை வைக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌னை முஸ்லிம்க‌ள் எதிர்த்த‌ போது ஒரு வார‌த்தில் சிலை அக‌ற்ற‌ப்ப‌டும் என‌ பிர‌த‌ம‌ர் ர‌ணில் சொன்ன‌தாக‌ கூறி முஸ்லிம்க‌ளை ஏமாற்றினார்.

எம்மை பொறுத்த‌ வ‌ரை இந்த‌ சிலைவைப்பின் பின்ன‌ணியில் ஐ தே க‌ ம‌ற்றும் அத‌ன் முஸ்லிம் ஏஜ‌ன்டான‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைக்க‌த்துடிக்கும் ட‌ய‌ஸ்போரா என்ப‌ன‌வே இருக்கின்ற‌ன‌. அவ‌ற்றின் நிக‌ழ்ச்சி நிர‌லே ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து.
இந்த‌ சிலை வைப்புக்கெதிராக‌ அம்பாறை மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ளால் ஆர்ப்பாட்ட‌ம் செய்த‌ போதும் அதில் மேலேயுள்ள‌ ச‌திகார‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள் கூற‌ப்ப‌ட்டு ஆர்ப்பாட்ட‌ம் ந‌ட‌க்காத்தால் அத‌ன் க‌ருத்திய‌ல் பிசு பிசுத்து விட்ட‌து.

ஆக‌வே இனியாவ‌து இது விட‌ய‌ங்க‌ளில் உல‌மா க‌ட்சியின் க‌ருத்துக்க‌ளை செவியேற்று முஸ்லிம்க‌ள் விழிக்க‌ வேண்டும். அந்த‌ வ‌கையில் இத்த‌கைய‌ சிலை வைப்பை க‌ண்டிக்கிறோம் என்ற‌ செய்தியை உல‌குக்கு தெரிய‌ப்ப‌டுத்தும் வ‌கையில் ஐ தே க‌வின் மே தின‌த்தை முஸ்லிம்க‌ள் புற‌க்க‌ணிக்க‌ வேண்டும்.

3 comments:

  1. மௌலவி முபாரக் அவர்களே அண்மையில் நீங்கள் ஜனாதிபதி மைத்ரியுடன் சேர்ந்து கொண்ட செய்தியை பத்திரிகை வாயிலாக தெரிந்து கொண்டேன். நீங்கள் சொல்லும் ரணிலும் அதேநேரம் நீங்கள்சேர்ந்து கொண்ட மைத்ரியும் கைகோர்த்து ஆட்சி செய்வது உங்களுக்கு தெரியாதா அப்படியாயின் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டியது ரணிலை மட்டும் அல்ல மைத்ரியையும் தான். நீங்கள் சில மாதங்களுக்கு முன் மகிந்த ராஜபக்ச அவர்கள் பக்கம் இருண்டு கொண்டு இந்த இருவரையும் என்ன சொன்னீர்கள் என்று பழைய நாளிதழ்களை பிரட்டி பார்த்தல் புரியும் என்று நினைக்கின்றேன்.
    மௌலவி முபாரக் அவர்களே சமகால நிகழ்வுகளை பார்க்கும் பொது முஸ்லிகளுக்கு இந்த இருவராலும் எந்த விமோசனமும் கிடைக்க போவது இல்லை. இன்று எனக்கு madawalanews.com ம்மில் மகிந்த ஒரு மாவீரன் தான் என்ற கட்டுரை ஒன்றை வாசிக்க கிடைத்தது உண்மையில் அதில் கூறிய விடயங்கள் நடந்தவைகள் தான் இப்படி பார்க்கும் பொது எவன்தான் உண்மையாளன் என்று கண்டு கொள்வது கடினம் தான்.

    ReplyDelete

  2. ஐக்கிய தேசிய கட்சியின் சூழ்ச்சிகளை இன்னமும் கொழும்பு முஸ்லிம்கள் உணர்ந்து கொள்வதாக தெரியவில்லை

    ReplyDelete
  3. சிலை வைத்த ஐ. தே. க பக்கம் போகாதீங்க. வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட மைத்ரி பக்கம் போங்க. மைத்திரியா விட மஹிந்த நல்லம்

    ReplyDelete

Powered by Blogger.