Header Ads



சிரியா மீதான அமெரிக்க தாக்குதல், உலக அமைத்திக்கு அச்சுறுத்தலானது - ஈரான்

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின் மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர்.

சர்வதேச மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல முக்கிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐக்கியநாடுகள் சபை போன்றவை மிக காரசாரமான கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிரியா நாட்டு விமானப்படை தளத்தின்மீது நேற்று அமெரிக்கா பயங்கரமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. சிரியாவின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறலை கண்டிக்கும் வகையில் இந்த அதிரடி தாக்குதலை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷைராத் விமானப்படை தளத்தின்மீது அமெரிக்க போர் விமானங்கள் 59 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் விமானப்படைத் தளம், போர் விமானங்கள் மற்றும் அங்கிருந்த பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை தீக்கிரையாகின. அங்கிருந்த ஏராளமான வீரர்களும் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு சிரியாவின் முக்கிய ஆதரவுக் கரங்களான ரஷ்யா, பொலிவியா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், சிரியாவின் மிக நெருங்கிய நட்பு நாடான ஈரான் நாட்டின் அதிபர் ஹஸன் ரோஹானி ,” சிரியாவில் நடைபெற்ற ரசாயனத் தாக்குதல் குறித்து உரிய விசாரணை வேண்டும். குறிப்பாக ரசாயண குண்டுகள் எங்கிருந்து வந்தன என்பது தொடர்பான விபரங்கள் தெரிய வேண்டும். அமெரிக்கா நடத்தி வரும் ஏவுகணை தாக்குதல் பிராந்திய மற்றும் உலக அமைத்திக்கு அச்சுறுத்தலானது. இத்தகைய அரசியலை உலகமுழுவதுமுள்ள நாடுகள் நிராகரிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Powered by Blogger.