Header Ads



இலங்கை மருத்துவர், லண்டனில் பலி

லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் நிபுணத்துவ சங்கத்தின் துணைத் தலைவரும் வைத்தியருமான செஸ்மல் சிறிவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் மத்திய லண்டன் ஆக்ஸ்போர்ட் வீதியில் இடம்பெற்ற இரட்டைப் பஸ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

லண்டனில் சடலமாக மீட்கப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

38 வயதுடைய குறித்த இலங்கை வைத்தியர் கிரீன்விச் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பும் போது N98 என்ற பஸ் வண்டியில் மோதுண்டுள்ளார்.

அவரது இறப்பின் போது அவர் London School of Hygiene and Tropical Medicine என்ற பாடசாலையில் இணை பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் கற்கை நிறைவு செய்தவர், ரஷ்யாவில் உள்ள People’s Friendship பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்றவர் அங்கு முதுகலைப் படிப்புகளை மேற்கொண்டுள்ளதுடன் 2015ஆம் ஆண்டு PhD கற்கையை நிறைவு செய்துள்ளார்.

வைத்தியர் சிறிவர்தன உயிரிழந்த வீதி பிரித்தானியாவின் மிகவும் ஆபத்தான வீதியாக 2015ஆம் ஆண்டு பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.