Header Ads



இஸ்லாமிய நம்பிக்கை உணர்வுகளை, நாம் கவனத்தில் கொள்கிறோம் - மகிந்த

வியோன் (டபிள்யு.ஐ.ஓ,என்) தொலைக்காட்சியின் மூத்த சர்வதேச நிருபர் பத்மா ராவ் சுந்தர்ஜி யுடன் “வேல்ட் இஸ் வண் : உலகளாவிய தலைவர்கள்” என்கிற நிகழ்ச்சித் தொடருக்காக கொழும்பிலுள்ள அவரது வீட்டில் இருந்து உரையாடினார். அதிலிருந்து ஒரு கேள்வி

பத்மா ராவ் சுந்தர்ஜி: பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மையமாக உள்ளது, பெரும்பாலும் இந்தியாவை இலக்கு வைத்துள்ளது. மாலைதீவு கூட தெற்காசியாவில் அதிகளவிலான இஸ்லாமிய நாட்டு ஆட்சேர்ப்பாளர்களின் வீடாக உள்ளது. மற்றும் அவர்கள் விரைவாக சவுதியின் வகாப்பிஸத்தின் செல்வாக்குக்கு ஆட்படுகிறார்கள். பங்களாதேஷ் ஐ.எஸ் பயங்கரவாதம் மற்றும் ஸ்லீப்பர் செல்களை பார்த்து விட்டது.உங்கள் நீதி அமைச்சர் சமீபத்தில் 31 உயரடுக்கு முஸ்லிம்கள்கூட ஐ.எஸ் இல் இணைந்திருப்பதாகச் சொன்னார். இவைகள் எல்லாவற்றையும் பார்க்கும்போது, இந்தப் பிராந்தியத்தில் இஸ்லாமிய பயங்கரவாதததினால ஏற்படும் ஆபத்தை அலட்சியம் செய்வதைக் காட்டிலும், ஸ்ரீலங்கா இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது நிச்சயமாக சிறந்தது இல்லையா?

மகிந்த ராஜபக்ஸ: எங்கள் அயல்வக்கத்தில் உள்ள எல்லா நாடுகளுடனும் நாங்கள் உறவுகளை மேம்படுத்த வேண்டும் என நம்புகிறோம், இதை நான் கட்டாயம் உங்களிடம் சொல்ல வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே தங்களால் இயன்றளவு சிறப்பாக எங்களுக்கு உதவி உள்ளார்கள். மரபு ரீதியாக இரண்டு நாடுகளுடனும் நாங்கள் நண்பர்களாக இருந்து வருகிறோம். மற்றும் அந்த நட்பு பரஸ்பரம் பிரத்தியேகமானதாகவோ மற்றும் முரண்பாடானதாகவும் இருக்காது, அதாவது ஒருவருடானான நட்பு மற்றவரின் நட்டத்தில் இல்லை. நாங்கள் எங்கள் பிரஜைகளின் இஸ்லாமிய நம்பிக்கை உணர்வுகளை நாம் கவனத்தில் கொள்கிறோம். எங்கள் முன்னாள் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா இஸ்லாமிய உலகின் நெருங்கிய நண்பராக இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். நிச்சயமாக எங்களுக்கு ஒரே அயல்நாடாக இந்தியா மட்டுமே உள்ளது. அது ஒரு உப கண்டம் மற்றும் எங்கள் தமிழ் குடிமக்கள் கலாச்சார மொழியியல் மற்றும் நாகரீக தொடர்புகளைக் கொண்டுள்ளார்கள். இவை எல்லா காரணங்களாலும் இந்தியாவுடனான எங்கள் நட்பு மற்றும் உறவு என்பன பெரிதும் விசேடமானது. தனித்துமானது கூட என்றுதான் சொல்லவேண்டும்.

3 comments:

  1. who is this stupid pad ma raw sun ei jee

    ReplyDelete
  2. At least former president, understands the importance of Islamic belief of Muslim. As Muslim we grateful to that.

    ReplyDelete
  3. முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள்.
    (அல்குர்ஆன் : 33:60 www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.