April 26, 2017

அம்பாறை முஸ்லிம்களை கோழைகளாக்கி, அடிபணிந்தவர்களாக்க சதி..!


-மு.இ.உமர் அலி-

இலங்கையின் கிழக்கு   மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்கள் ஆரம்பத்தில் குடியேறிய இடமாக கருதப்பட்டு வரும் இடம்தான் இறக்காமம். இறக்காமம் வரிப்பத்தான்சேனை சந்தியில்  இருந்து கிழக்குநோக்கி வயல்கள் மற்றும் சிறு மலைகளினூடாக ஒரு பிரதான பாதைசெல்லுகின்றது இப்பாதை சம்மாந்துறை,ஒலுவில் பிரதேசத்திற்கு செல்வதற்காக  குடுவில் எனும் முஸ்லீம் கிராமத்தில் இரண்டாக முறையே வடக்கு ,வடகிழக்காக  பிரிகின்றது.

வரிப்பத்தான்சேனை சந்தியில்  இருந்து குடுவில் கிராமம் செல்லும்வரை வலதுபக்கமாக நல்லதண்ணி எனும் இடத்தில் முஸ்லீம்களும் மாணிக்கமடு என்னும் இடத்தில் இந்துக்களும் வாழ்கின்றார்கள் ,மாணிக்கமடுவினை அடுத்து ஓட்டுத்தொழிற்சாலை  இருக்கின்றது.இப்பிரதேசங்கள் எவற்றிலும் பௌத்தர்கள் வாழவில்லை. 

இதற்கிடையில் இருக்கின்ற மேட்டு நிலங்கள்,வயல்காணிகள் அனைத்தும் முஸ்லீம் மக்களுக்கு சட்டபூர்வமாக அரசினால்  வழங்கப்பட்டவை.இப்பிரதேசத்தின் காணிகளுக்கு  எண்பதுகளில் வருடாந்த காணி உத்தரவுப்பத்திரங்களும் அதனைத்தொடர்ந்து 1990  ஆம் ஆண்டுகளில் LDO காணி அபிவிருத்தித்திருத்த சட்டத்தின் அடிப்படையிலான LDOஅனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி இந்த காணிகள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மழைபெய்தால்  வெள்ளத்தில் மூழ்கிவிடக்கூடியவை.90 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் அம்பாறை ஈசீசீ சந்தியில் இருந்து துரத்தப்பட்ட துப்பரவுத்தொளிலார்களை இவ்விடத்தில் குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டு வெல்ல அபாயத்தினை கருத்திற்கொண்டு இத்திட்டம் கைவிடைப்பட்டது.

இவ்வாறான இடத்தில் வீதியின் இடதுபக்கமாக பள்ளம் படுகுழிகளுக்கிடையிலே சில எச்சக்குன்றுகள் காணப்படுகின்றன.குண்றுகளின் அடிவாரத்தில் நெற்காணிகள் உள்ளன.இக்காநிகளுக்கு LDO உத்தரவுப்பத்திரமும் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இக்குன்றுகளில் சில சிதைவடைந்த படிக்கட்டுகள் ,நீர்த்தடாகம் போன்ற அமைப்புக்கள் காணப்படுகின்றன.இவை பண்டைய ராஜதானிகளின் சுவடுகளாக இருக்கலாம் என்று தொபொருள் திணைக்களம் கருதுகின்றது.

கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இருந்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கோத்தாபாயவின் உறவினரான  சரத்வீரசேகர என்வர் தனது முயற்சியினால் தொல்பொருள் திணைக்களத்தினூடாக இவ்விடத்தினை பாதுகாப்க்கப்பட வேண்டிய இடம்  என்ற  தோரணையில் 20110.10.10 ஆம் திகதிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளிப்படுத்தினார்.

அப்போது அரசுடன் இருந்த முஸ்லீம் அமைச்சர்கள் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை.அப்படி அறிந்திருந்தாலும் அவர்கள் எவரும் இதுபற்றி வாய்திறக்கவில்லை,வாய்திறந்திருந்தாலும் பயனேதும் கிடைக்கவுமில்லை.

அதிகாரிகள் இவ்வாறு இருக்கையில் அரசியல்வாதிகள் மறைமுகமான தமது நிகழ்ச்சித்திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு,அப்பாவி பௌத்த மக்கிளடத்திலே இடம்பிடிப்பதர்க்கும்,மார்க்குகளை வாங்குவதர்க்காவும் அரசியல் சுயலாபத்திற்காகவும் இவ்வாறு நடந்துகொகின்றனர்.

அமைச்சர் தயாகமகே அவர்களை பொறுத்தவரை  கடந்த பொதுத்தேர்தலில் முஸ்லீம் ,தமிழ் மக்களது வாக்குகளில் கிட்டத்தட்ட முப்பதுனாயிரம்  வாக்குகளை பெற்றிருந்தார். சிங்கள மக்களின் ஆதரவு அவருக்கு இன்னும் போதாமலேயே இருக்கின்றது.இவ்வாறான இனவாத சிந்தனைகளை மக்கள் மனதிலே விதைப்பதனால்  மக்கள் மனம் மாறி தமது ஆதர்வார்காக மாறுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கலாம்.அதே வேளை முஸ்லீம் வாக்குகளை அவர் கணிசமான அளவு இழக்கக்கூடும்,ஆனால் தொகுதிரீதியாக  தேர்தல் நடைபெறுமெனில் தயா கமகேயின் திட்டம் வெற்றியளிக்கும்.இல்லாவிட்டால் முகவ்றியே இல்லாமல் போகும்.

அது ஒருபுறம் இருக்க பௌத்த மக்கள்  வாழும் இடங்களில் பௌத்த விகாரை அமைப்பது நியாயமான விடையம்.இலங்கையில் தற்பொழுது முஸ்லீம்கள் வாழும் இடங்களிலே இருக்கும் பளிவாசல்களை  உடைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றபோது பௌத்தர்கள் யாருமே வாழாத மாயக்கல்லி மலை போன்ற  இடங்களில் விகாரை எதற்கு?புராதன இடங்களை பாதுகாக்க தொல்பொருள் திணைக்களம் இருக்கின்றது அதற்கான அதிகாரிகள் இருக்கின்றார்கள். நாட்டின் சட்டத்தினை பொதுமக்களிடம் கொடுக்கமுடியாது என்று கூறும் நீதித்துறை ஒருசாரார் சட்டத்தினை கையிலேடுத்திருப்பதை  பார்த்துக்கொண்டு வாளாவிருப்பது  நீதித்துறை சுதந்திரமாக இயங்குகின்றது என்று கூறும் நாட்டில் எவ்வாறு சாத்தியமாகும்?

இதன் பின்னணியினை ஆராயும்போது முஸ்லீம்களை ஆத்திரப்படவைத்து அவர்களை உணர்ச்சிவசமான செயல்களிலீடுபட தூண்டுவதும், அதனைத்தொடர்ந்து முஸ்லீம்களது பொருளாதார நிலையங்களை பலவகைகளிலும் முடக்குவதும்,படையினரை முஸ்லீம் ஊர்களில் முகாமிடச்செய்து எம்மவரது இயல்பு வாழ்க்கைகளை முடக்கி வாழ்க்கைத்தரத்திலே  குன்றவைத்து அடிபணிந்த ஒரு சமுதாயமாக உணர்ச்சிகளற்ற கோழைகளாக மாற்றிவிட்டு தமது விருப்பத்திற்கு ஏற்றால்போல ஆட்சிசெய்ய போட்டிருக்கும் திட்டமேயாகும்.

எனவே அரசியல் ரீதியாக பலகீனமடைந்துகொண்டிருக்கும் முஸ்லீம் சமூகமானது ,அரசியல் தலைவர்களை மட்டும் குறைகூறிக்கொண்டு வெறுமனே வாளாவிருக்காது ஆன்மிக மற்றும் சமூக ரீதியில்  ஒற்றுமைப்படவேண்டும்.அரசியல் சக்திகளையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு வடிவம் விரைவில்  உருவாக்கப்பட்டு அதனூடாக இளம்  சந்ததியினரை ஆத்திரப்பட்டு முடிவுகளை எடுக்காதவர்களாக மாற்றுவதுடன்,ஏற்படவிருக்கும் அனர்த்தங்களை முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு திசை திருப்பிவிடக்கூடியவர்களாகவும் தாயார்படுத்தவேண்டும். அன்றி , இயக்கங்களிற்கும்,கட்சிகளிற்கும் அடிமைப்பட்டு எமக்குள் அடித்துக்தொண்டிருப்போமேயானால் சதிகாரர்களின் நிகச்சி நிரல் எதுவித பின்னடைவும் இன்றி இனிதே நடந்தேறும்.

எமது சமூகத்தினை சேர்ந்த உயர் பதவிகளில் வகிப்போர்கள் அரசின் சட்டங்களில் எமக்கு சாதகமாக உள்ளவற்றையும் பற்றி சிந்தித்து அரசியல்வாதிகளுக்கு  அவைபற்றிய தகவல்களை வழங்குதல் வேண்டும். ஏனெனில் எமது அரசியல் தலைவர்கள் எல்லோரும் இலங்கையின் சட்டங்களில் கைதேர்ந்தவர்களில்லை.

1 கருத்துரைகள்:

muslims who voted for daya gamage mp must be punnish. specially addalaichenai public who were behind loyids owner. these leckeries must be stoned by the publuc to teach them good lessons.

Post a Comment