Header Ads



எனது கூட்டங்களுக்கு வரும் மக்கள் கூட்டத்தை பார்த்து, அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்கிறது

எனது கூட்டங்களுக்கு வரும் மக்கள் கூட்டத்தை பார்த்து அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகம் ஒன்றை திறந்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நான் வரும் போது மக்கள் வருகின்றனர். மக்கள் கூட்டத்தை பார்த்து அரசாங்கம் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு தேர்தலை ஒத்திவைக்கின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகள் தாமதமடைந்துள்ளன. இனிமேல் நான் வரும் கூட்டங்களுக்கு மக்களை வரவழைக்க வேண்டாம்.

வெளிநாடுகளில் நடைபெறும் கூட்டங்களில் ஹம்பாந்தோட்டையில் எமக்கு சிறந்த துறைமுகம் இருப்பதாக பிரதமர் கூறுகிறார். அங்கு வந்து தொழிற்சாலையை அமைக்குமாறும் கூறுகிறார்.

எனினும் இலங்கை திரும்பியது ஹம்பாந்தோட்டை துறைமுகம் மிகப் பெரிய நீச்சல் தடாகம் என்கிறார். நான் இது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

அவற்றை நான் நிர்மாணித்தன் காரணமாகவே அவர்கள் முதலீட்டாளர்களிடம் அது பற்றி கூறுகின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

Powered by Blogger.