Header Ads



நாட்டில் கடும் வெப்பம் - கண் நோய் ஏற்படும் அபாயம்

நாட்டில் நிலவிவரும் கடுமையான வெய்யிலுடன் கூடிய காலநிலை காரணமாக கண் சார்பான நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

கண் சிவப்படைதல், கண் சொரிதல், கண்ணீர் அதிகமாக வருவதுடன், சிறியளவிலான வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அருகில் உள்ள வைத்தியர்களை நாடுமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தமான கைக்குட்டைகளை பயன்படுத்துமாறு கண் மருத்துவ சிறப்பு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை பொதுமக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்குமாறும், தரமான கண்ணாடிகளைப் பயன்படுத்துமாறும், வெய்யிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கு குடைகளை எடுத்துச் செல்லுமாறும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.  

குறிப்பாக முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 4 மணி வரையான காலப் பகுதியில் வெளியிலில் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.