Header Ads



இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக முஸ்லிம் அல்லது தமிழர் நியமிக்கப்பட வேண்டும் - சுனில் பெரேரா

அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை -16- இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுனில் பெரேரா வெளியிட்ட கருத்தினால் குழப்பமான நிலை ஒன்று ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், அவரை தாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் பௌத்த மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்க வேண்டும். இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்திற்கு அங்கிருந்த அனைவரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன்போது சுனில் பெரேரா மீது மேற்கொள்ளப்படவிருந்த பாரிய தாக்குதல் நடவடிக்கை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தடுக்கப்பட்டதுடன், பாடகர் உயிர் தப்பியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் சுனில் பெரேராவை இவ்வாறான நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

4 comments:

  1. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கே இப்படி கொதிக்கும் பெரும்பான்மை சமுகம் எங்கே எங்களது உரிமைகளை தரப்போகின்றனர்.

    ReplyDelete
  2. தமது இனம் எந்தளவுக்கு நாட்டு பற்றோடு இருக்கிறார்கள் என்பதை பரிசீலனை செய்வதற்கு சொன்னாரோ தெரியவில்லை

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ், சரியான கருத்து, பெளத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கத் தேவையில்லை.

    ReplyDelete
  4. Muslims in SL do not want President, PM, Cabinet of Ministers (Rauf Hakeem & Rishad), High Commissioners etc. What we want is the equal citizenship enjoyed by the majority Buddhist.

    ReplyDelete

Powered by Blogger.