Header Ads



மீதொட்டமுல்ல அனர்த்தம் பற்றி, முன்கூட்டியே அறிந்துகொண்ட நாய்கள்

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் அந்தப் பிரதேசத்தில் இருந்த நாய்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீதொட்டமுல்ல ஸ்ரீ ராஹூல வித்தியாலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள குப்பை மேடு சரிந்து பாரிய அனர்த்தம் இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில் இதுவரையில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலியானோர் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் சொத்துக்களுக்கு மிகப் பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனர்த்தம் ஏற்படுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே அந்தப் பகுதியில் இருந்த நாய்கள் அதனை உணர்ந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள் இதனைத் தெரிவிக்கின்றனர்.அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னதாக நாய்கள் பாரிய சத்தத்துடன் குரைத்துள்ளன.

அத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறிச் சென்றுள்ளன.சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நாய்கள் கூட அவற்றை அறுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேற முயற்சித்துள்ளன.

குப்பை மேடு சரிந்து வீழ்ந்து சில மணித்தியாலங்களின் பின்னர் மீளவும் நாய்கள் அந்த இடத்திற்கு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

4 comments:

  1. அப்ப நாய்களை கைது செய்து பொலிசில் இருக்கும் பொலிஸ் நாயை கொண்டு விசாரணை நடத்தினால் ஏசு நாதர் வருங்காலத்தில் அறிக்கை கிடைத்து விடும்,

    ReplyDelete
  2. சுனாமியின் பொழுது குருவிகள், பறவைகள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறியதாக அப்பொழுது சொல்லி இருந்தார்கள். நாய்கள் மட்டும்தான் இப்படி உணர்வதாக விசேடமாக குறிப்பிட்டு செய்தி எழுத வேண்டாம், ஏனெனில் இஸ்லாத்தில் நாய்கள் நஜீஸ் ஆகும், அல்லாஹ் நஜீஸ் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது இஸ்லாத்தை பிழையாக மக்கள் நினைக்க வழிவகுத்துவிடும்.

    ReplyDelete
  3. No scientific study has proven that animals reliably predict natural disasters, but if your beagle starts losing it for no apparent reason, brace yourself.

    There's enough anecdotal evidence of creatures freaking out and even fleeing areas en masse before earthquakes to take unusual animal behavior seriously, as our gallery of dog-related tweets that followed today's 5.9 earthquake in D.C. suggests.

    But there's nothing supernatural or sixth sense about it. Seismologists think animals sense an electrical signal generated by the movement of underground rocks before an earthquake. Or they might sense early but weak shocks that humans can't feel. Even the U.S. Geological Survey concedes that animals likely perceive earthquakes sooner than humans: (from a website)

    ReplyDelete

Powered by Blogger.