Header Ads



ஒரு நாய்க்கு உதவுவதற்கே, சுவனம் என்றால்...!


-M.A.முஹம்மத் ஸலாஹுத்தீன் B.Com-

 ''மனிதநேய மிக்க வாழ்வு நெறி'' கூறும் ''வளமார்ந்த சமூக சார்பு ஆன்மீக நெறி'' மார்க்கம் இஸ்லாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹதீஸ் குத்ஸியில் கூறுகிறான். "என்னை நம்பு. (எனக்கு மனைவி மக்கள் இருக்கிறார்கள் என்று பொய்யாக) இணை வைக்காதே! வானம் அளவு பாவம் செய்தாலும் நான் உன்னை மன்னிக்கிறேன்."

''ஹதீஸ் குத்ஸி'' என்பது அல்லாஹ் உடைய உரை! வார்த்தைகள் அண்ணலாருடையது. அப்படி என்றால் குர்ஆன்..?!

குர்ஆன் அல்லாஹவின் உரை. மூலமும் அல்லாஹ்வுக்கே உரியது.

ஹதீஸ் என்பது அண்ணலாரின் சொல்.

எழுதப் படிக்காத தனது இறுதி தூதர் மூலமாக மூன்று வகை உரைகளை வெளிப்படுத்தியது இலக்கிய உலகின் விந்தை.

''ஏக இறை நம்பிக்கை'' அவ்வளவு கண்ணியமிக்கது எல்லாம் வல்லோனிடம்.

பெரிய ஆச்சரியம்.

இங்கு அல்லாஹ் பாவ மன்னிப்பு கூட கேட்கச் சொல்லவில்லை.

விளங்க வேண்டிய கருத்து அல்லாஹ்விடத்தில் ''ஏக இறை நம்பிக்கை'' அவ்வளவு உயரிய இடம் பெற்று இருக்கிறது என்பதை!

ஆக பாவம் செய்வதற்கு அனுமதி கிடைத்து விட்டது என்று யாரும் விளங்கி செயல்படுவதில்லை.

ஒரு விபச்சாரி ஒரு நாய்க்கு அதன் தாகம் தீர்ப்பதற்காக கொஞ்சம் முயற்சி செய்து நீர் புகட்டுகிறாள். இந்த ஒரு சின்ன செயலுக்காக அல்லாஹ் அவளுக்கு சுவனம் அளித்த சம்பவத்தை ஹதீஸிலே கண்டிருப்போம்.

அதற்காக எந்த பத்தினி பெண்ணும், ''ஆகா! இனி நானும் அவளைப் போல மாறி சொர்க்கம் செல்கிறேன்'' என்று விளங்கி கற்பை விலை கூறி விற்க முயலுவதில்லை.

அப்படியா சங்கதி என்று எந்த ஆணும் நாயைத் தேடி நீர் புகட்டி சொர்க்கம் செல்ல முயற்சிப்பதில்லை.

இயல்பாகவே இயற்கையாகவே உதவும் பக்குவத்திற்கு இது உந்தும்.

வேசிக்கோ நாய்க்கோ எந்த முக்கியத்துவம் தராத இஸ்லாத்தில் ஒரு நாய்க்கு உதவுவதற்கே சுவனம் என்றால் ஒரு மனிதனுக்கு உதவினால் என்ன நன்மை கிடைக்கும் என்ற சிந்தனை தலை தூக்கும் போது ஒரு முஸலிம் சிரமப்படும் யாருக்கும் உதவுவது இயல்பே. அறிவுடைமையே.

ஆம். ''மனிதநேய மிக்க வாழ்வு நெறி'' கூறும் ''வளமார்ந்த சமூக சார்பு ஆன்மீக நெறி'' மார்க்கம் இஸ்லாம்.

No comments

Powered by Blogger.